சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: தீவிர சோதனை
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சென்னை தலைமைச் செயலகத்தில் குண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் வந்த தகவலின் பேரில், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தலைமைச் செய லகத்தில் சோதனையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, செயலகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் பணியா ளர்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லும்படி அறிவுறுத்தப் பட்டனர். தலைமைச் செயலக பகுதியைத் தங்களின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்த போலீசார் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதேபோன்று ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார்ப் பள்ளிக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களில் வெடிகுண்டு நிபு ணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இளையராஜாவின் பாடல் பயன்பாட்டிற்கு இடைக்கால தடை
சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், அஜித் குமார், திரிஷா உள்பட பலர் நடித்து கடந்த ஏப்ரல் மாதம் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தனது அனுமதியின்றி பாடல் களைப் பயன்படுத்தியது பதிப்புரிமைச் சட்டத்திற்கு விரோத மானது என்றும், படத்தில் பாடல்களைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்றும், உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் இளையராஜா மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி என். செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. ‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜாவின் இசையில் ஏற்கனவே வெளியான திரைப்படத்தில் உள்ள மூன்று பாடல்களையும் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மனு குறித்துப் பட தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட வழக்கு விசாரணை இரண்டு வாரங்களுக்குத் தள்ளி வைக்கப் பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி சுயநல அரசியல் செய்கிறார் கருணாஸ் கடும் விமர்சனம்
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி சாமி சுயநல அரசியல் செய்கிறார் என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் கடுமையான விமர்ச னங்களை வைத்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன், அதிமுக ஒன்று சேர வேண்டும் என்றும், பிரிந்தவர்கள் இணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றும் கூறி 10 நாட்கள் கெடு விதித் திருந்தார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் மற்றும் அவரின் ஆதரவாளர்களின் கட்சி பொறுப்புகளை நீக்கும் அதிரடி நடவடிக்கையில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய கரு ணாஸ், “ஜெயலலிதாவின் கனவை பள்ளம் தோண்டி புதைக்கக் கூடிய வேலையை எடப்பாடி பழனிசாமி செய்து கொண்டிருக்கிறார். 2026-இல் திமுகவின் ஆட்சிதான் உருவாகும். அன்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எங்கே இருக்கும் எனக் கூட தெரியாது. ஆனா லும் அந்தக் கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்று நானும் நினைக்கிறேன். சுயநல அரசியலை செய்து கொண்டி ருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்று கருணாஸ் கடுமை யாக விமர்சித்துள்ளார்.
‘எந்தப் பலனும் இல்லை’
திருப்பூர்: திருப்பூர் இளம்பெண் ரிதன்யா வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதில் எந்தப் பலனும் இல்லை என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது தந்தை அண்ணாதுரை மனுத் தாக்கல் செய்தார். வழக்கின் விசாரணையை மேற்பார்வையிட திருப்பூர் மாவட்ட எஸ்.பி.க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை மாநகராட்சி வரி மோசடி புகார் சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
புதுதில்லி: மதுரை மாநகராட்சி வரி மோசடி புகார்களை சிபிஐ விசாரிக்கக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரை மாநகராட்சியில் சில கட்டடங்களுக்கு வணிக வரிக்குப் பதிலாகக் குடியிருப்பு வரியாக மாற்றி நிர்ணயம் செய்தது, குடியிருப்புக் கட்டடங்களுக்கு வரிக் குறைப்பு செய்தது என வரி ஏய்ப்பு வாயிலாகப் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. எனவே, இந்த விவகாரத்தை ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான சிறப்புக் குழுவுக்குப் பதிலாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என கே.கே. ரமேஷ் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந் தார். இந்த மனுவை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலை மையிலான உச்சநீதிமன்ற அமர்வு திங்களன்று தள்ளுபடி செய்தது.
தென்பெண்ணை நீர் தாவா நடுவர் மன்றம் தமிழக அரசின் மனு மீது
செப்.23-இல் விசாரணை புதுதில்லி: தென்பெண்ணை நீர் தாவா நடுவர் மன்றத்தை அமைக்கக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, செப்டம்பர் 23-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இதுதொடர்பான தமிழ்நாடு அரசின் மனுவை அவசர மாக விசாரிக்கக் கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதி மன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு முன்பு முறையிடப்பட்டது. இதையேற்ற உச்சநீதிமன்றம், தென்பெண்ணை நீர் தாவா நடுவர்மன்றத்தை அமைக்கக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை செப்டம்பர் 23-ஆம் தேதி நடை பெறும் என தெரிவித்துள்ளது
.மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம்
சென்னை: மறு மலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகத்தில் (மதிமுக) இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக கட்சி யின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். புதிய கட்டுப்பாடுகள் சென்னை: டிஜிபி அலு வலகத்திற்கு வருபவர்கள் தங்கள் விவரங்கள் தெளி வாக தெரியும்படி அடை யாள அட்டை அணிய வேண்டும் என்று கட்டுப்பா டுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஏர்போர்ட் மூர்த்தி - விசிகவினர் மோதிக் கொண்ட நிலை யில், பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட பகுதி களில் மட்டுமே செல்ல வேண்டும்; அனுமதி இல்லாமல் புகைப்படம், வீடியோ அல்லது ஒலிப் பதிவு செய்யக் கூடாது; ஆயுதங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட எந்த பொருட்களும் கொண்டு வர அனுமதி இல்லை என புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ‘
அதிமுகவை உடைத்தது பாஜக
’ சென்னை: ஒன்றாக இருந்த அதிமுகவை உடைத்தது பாஜக, ஆர்.எஸ்.எஸ். என திரா விடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேட்டியளித்து உள்ளார். “உடைந்த அதி முகவை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்ப தும் பாஜக-ஆர்.எஸ்.எஸ்.தான். அதிமுகவை ஒருங்கிணைத்தாலும் தமி ழகத்தில் பாஜகவால் கா லூன்ற முடியாது” என வும் கி.வீரமணி தெரிவித் துள்ளார். 20 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் சென்னை: பயணி களின் வசதிக்காக நெல்லை - எழும்பூர் வந்தே பாரத் ரயில் 20 பெட்டிகளுடன் இயக்கப் படுகிறது. ஆரம்பத்தில் 8 பெட்டி, 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட வந்தே பாரத் தற்போது 20 பெட்டி களுடன் இயக்கப்படுகிறது. 9 ஆயிரம் ஏக்கர் உப்பு உற்பத்தி பாதிப்பு நாகை: ஞாயிறன்று பெய்த மழையால் உப்ப ளத்தில் தண்ணீர் தேங்கி யுள்ளதால், வேதாரண் யம் அருகே அகஸ்தியன் பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட இடங்களில் 9 ஆயிரம் ஏக்கர் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.