tamilnadu

img

வ.உ.சி பிறந்த தினத்தில் நெல்லையில் ஆயிரம் பேர் பங்கேற்கும் இரத்த தான முகாம்

வ.உ.சி பிறந்த தினத்தில் நெல்லையில் ஆயிரம் பேர் பங்கேற்கும் இரத்த தான முகாம்

சாதி, மதங்களைக் கடந்து விடுதலைப்போரில் மகத்தான பங்கு வகித்த நெல்லை மண்ணில் நிகழ்ந்து வரும் சாதிய  பகைமைகள், வெறுப்பு பேச்சுகள், வன்முறைச் சம்பவங்கள் சமூகத்தின் மீது, குறிப்பாக இளைய தலைமுறை யின் மீது அக்கறையுள்ள அனைவரு க்கும் ஆழ்ந்த கவலையை உரு வாக்கியுள்ளன. கால்நடையாய் திரிந்த மனிதக் கூட்டம், நதிக்கரைகளில் விவசாயம் செய்யத் துவங்கி, நாகரிகம் வளர்ந்து ஆலைத் தொழில் பெருகி, வான ஊர்தியில் கண்டம் விட்டு கண்டம் செல்லும் அளவிற்கு வளர்ந்த பின்ன ரும், இன்னும் சில பிற்போக்குத் தனங்களைத் தூக்கிச் சுமப்பதும், பகை வளர்ப்பதும், மனிதமற்ற முறை யில் நடப்பதும், மொத்த சமூகத்திற் கும் இழிவான காரியமாகும். அறி வியலே அனைத்திற்கும் அடிப்படை என்றானபின்பும் அறிவுக்குப் புறம் பான காரியங்களைச் செய்வது நமது சமூக வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாகவே இருக்கும். அடிமைப் பட்டுக் கிடந்த காலத்தில் சிறுகச் சிறுக உருவான நமது ஒற்றுமையை ஏகாதிபத்திய எதிரிகள் வெறுத்தனர், அழிக்க நினைத்தனர். அனைத்தும் கடந்து நமது ஒற்றுமையை உல கிற்குப் பறை சாற்றினோம், விடுதலை  பெற்றோம். ஆயினும் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் கருத்துகள், சிந்தனைகள் நம் சமூகத்தில் இப் போதும் வேரூன்றியிருப்பது நம் சமூகத்தின் அவமானம். முன்னோர்களின் வழிகாட்டுதல் சமூகப் பிணிகளை எதிர்த்து நம் முன்னோர்கள் செய்த காரியங் களையும் வீரியமிக்க கருத்துகளை யும் நாம்  தழுவி முன்னேற வேண்டும். “சாதிப் பிரிவுகள் சொல்லி, அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள் வார், நீதி பிரிவுகள் செய்வார், அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார், சாதிக் கொடுமைகள் வேண்டாம், அன்பு தன்னில் செழித்திடும் வையம் ஆதரவுற்றிங்கு வாழ்வோம், தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்” என்று ஆழமிக்க கருத்துகளை விதைத்துச் சென்றிருக்கிறார் மகாகவி பாரதி. தமிழக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை என்று பாரதியால் போற்றிப் புகழப்பட்ட வள்ளலார் சொல்கிறார், “சாதியிலே, மதங்களிலே, சமய நெறிகளிலே, சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே, ஆதியிலே அபிமானத் தலைகின்ற உலகீர், அலைந்தழிந்து வீணேநீர் அழிதல் அழகலவே.” வேற்றுமை பாராட்டி நமக்குள் சண்டையிடும் அவலத்தைப் பல பத்து ஆண்டுகளுக்கும் முன்பே சொல்லியிருக்கிறார் வள்ளலார். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா செய்தொழில் வேற்று மையான்” என்கிறது வள்ளுவம். பிறப்பின் அடிப்படையில் அனை வரும் சமம் என்கிறது உலகப் பொது மறையெனும் திருக்குறள். ஒற்றுமைக்கான சபதம் ஒற்றுமையே நமது நெல்லை யின் பெருமை. சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் ஒரு துளி ரத்தம் கூடப் பொருநை நதி பாயும் நமது மண்ணில் சிந்த அனுமதிக்கமாட் டோம் என்று சபதமேற்கும் நிகழ்வாக, ஆயிரம் பேர் குருதிக்கொடை அளிக்கும் நிகழ்வு இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக விடுதலைப்போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரனார் பிறந்த தினமான செப்டம்பர் 5 அன்று பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் நடைபெறுகிறது. பங்கேற்பாளர்கள் இரத்த தான முகாமை நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆர்.சுகுமார் துவக்கி வைக்கிறார். இரத்த தான முகாமை எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான ராஜூ முருகன், நெல்லை மாநகராட்சி ஆணையர் டாக்டர் மோனிகா ரானா, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன், ம.சு.பல்கலைக்கழகத் துணைவேந்தர் திரு சந்திரசேகர், தூய சவேரியர் கல்லூரி முதல்வர் டாக்டர் காட்வின்ரூபஸ், தூய யோ வான் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ். சுதாகர் ஐசக், நெல்லை அரசு மருத்து வக் கல்லூரி முன்னாள் முதல்வர்  டாக்டர் எஸ்.இரமகுரு, இக்னேஷி யஸ் கல்வியியல் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி வசந்தி மடோனா, வர லாற்று ஆய்வாளர் டாக்டர் கே.ஏ. மணிக்குமார், நெல்லை அரசு மருத்து வக் கல்லூரி இரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் ரவிசங்கர், சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முதல்வர் முனைவர் அப்துல் காதர்,  சாராள் டக்கர் கல்லூரி முதல்வர் டாக்டர் பெலிசியா கிளாடிஸ் சத்யா தேவி, பொருநை மருத்துவமனை மருத்துவர் சிவக்குமார், அருணா கார்டியக் கிளினிக் இயக்குநர் டாக்டர்  சொர்ணலதா அருணாச்சலம், பேரா சிரியர் வி.பொன்னுராஜ், எழுத்தா ளர் கே.ஜி.பாஸ்கரன், இந்திய ஜன நாயக வாலிபர் சங்க மாநில துணைச் செயலாளர் செல்வராஜ், இந்திய மாணவர் சங்க மாநிலச் செய லாளர் சம்சீர் அகமது, இந்திய மாண வர் சங்க மாவட்டச் செயலாளர் சைலஸ் அருள்ராஜ், மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பாளர் பார்த்தசாரதி ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர். - கே.ஜி.பாஸ்கரன்