tamilnadu

img

கருப்பு சனிக்கிழமை - செப்டம்பர் 27, 2025

கருப்பு சனிக்கிழமை - செப்டம்பர் 27, 2025

கரூரின் வானம் கண்ணீர் சிந்தியது. தமிழக  வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசத் தொடங்கி சில நிமிடங்களிலேயே, கூட்ட நெரிசல்  40 உயிர்களை பறித்துக் கொண்டது. எதிர்பார்த்ததை விட 3 மடங்கு அதிக கூட்டம் குவிந்தது. 10,000  பேர் வருவார்கள் என கணக்கிட்ட அதிகாரிகள், 27,000 பேர் குவிந்ததைக் கண்டு திகைத்தனர். காலை 11 மணியிலிருந்தே கூட்டம் சேர்ந்து கொண்டிருந்தது. ஆனால் விஜய் மாலை 7.40 மணிக்குத்தான் அந்த இடத்திற்கு வந்தார். அது வரை போதுமான தண்ணீர், உணவு வழங்கப்பட வில்லை என்று தமிழக சட்டம் ஒழுங்கு பொறுப்பு  டிஜிபி வெங்கட்ராமன் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

40 பேரும் மூச்சுத்திணறி பலி

கரூர் கூட்ட நெரிசலில் 40 பேர் மூச்சுத் திணறலால் மட்டுமே உயிரிழந்தனர் என தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குனர் ராஜகுமாரி உறுதிப்படுத்தினார். உடற்கூறாய்வில் 16 மருத்துவர்கள் ஈடுபட்டனர். பெரும்பாலானவர்களின் இறப்புக்கு காரணம் மூச்சுத் திணறல் என்பது உறுதியானது. 
10 குழந்தைகள், 14 ஆண்கள், 16 பெண்கள் என (ஞாயிறு மாலை 6.30 நிலவரப்படி) மொத்தம் 40 உயிர்கள் பறிபோனது. அனைவரும் உடல்களும் உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கரூர் அரசு மருத்துவமனையில் 52 பேர், தனியார் மருத்துவமனைகளில் 31 பேர் சிகிச்சை பெறுகின்றனர். 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. சேலம், ஈரோடு, மதுரையிலிருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். 60-70 மருத்துவர்கள் அயராது சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மரக்கிளை விபத்து

சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் ஈடிவி  பாரத் தமிழ்நாடு ஊடகத் திற்கு அளித்த பேட்டியில் சொன்ன விவரம் மனதை  உலுக்குகிறது. விஜயைப் பார்ப்பதற்காக இளைஞர் கள் சிலர் அங்கிருந்த வேப்ப  மரம் மீது ஏறிய போது, கிளை உடைந்து அருகில் உள்ள மின் கம்பியுடன் கீழே  விழுந்தது. அதில் இருந்து தப்பிக்க கூட்டம் சிதறி ஓடிய போது நெரிசல் ஏற்பட்டது என்கிறார் அவர்.

மருத்துவர்களின் அயராத பணி கரூர்

அரசு மருத்துவ மனையில் மருத்துவ பணியாளர்கள் தூக்கமின்றி உழைத்து வருகின்றனர். பாதிக் கப்பட்டவர்களைப் பார்வை யிட்ட காங்கிரஸ் மாநிலத்  தலைவர் கு.செல்வப்பெருந் தகை மருத்துவப் பணியாளர் களின் உழைப்பைப் பாராட்டி னார். “மருத்துவ பணியாளர்கள்  தூக்கமின்றி உழைத்து வரு கின்றனர். அவர்களது உழைப்பு  பாராட்டப்பட வேண்டும்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

திருமணம் நிச்சயமான நிலையில்...

ஆகாஷ் (24) மற்றும் கோகுலஸ்ரீ (24) - இந்த ஜோடிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திருமண நிச்சயம் நடைபெற்றிருந்தது. விரைவில் இருவருக்கும் திரு மணம் நடைபெறவிருந்த நிலையில், கரூரில் நடந்த தவெக கூட்டத்தில் பங்கேற்க சென்ற இருவரும் கூட்ட நெரிச லில் சிக்கி பரிதாபமாக உயிரி ழந்தனர். இந்த மனதை உலுக் கும் சம்பவம் அனைவரையும் கலங்கச் செய்துள்ளது.

முதல்வரின் இரவுப் பயணம் கரூர் துயர

சம்பவம் குறித்து அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை இரவே தனிவிமானம் மூலம்  கரூர் விரைந்தார். முதல்வர் ட்விட்டர்  பதிவில் கரூர் செய்திகள் கவலையளிக் கின்றன என வேதனை தெரிவித்தார். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெரிய கருப்பன், எஸ்.எஸ்.சிவசங்கர், மெய்யநா தன், சி.வி.கணேசன் ஆகியோர் கரூரில் முகாமிட்டு தேவையான பணிகளை மேற் கொண்டு வருகின்றனர்.

துணை முதல்வரின் ஆறுதல் வெளிநாடு

(துபாய்) சென்றிருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது பயணத்தை ரத்து செய்து விட்டு, தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். பிறகு,  அங்கிருந்து கார் மூலம் கரூர் சென்றார். அங்கு, உயிரிழந்தவர் களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர் களையும் சந்தித்து நலம் விசாரித்தார். “40 பேர் உயிரிழந்த துய ரத்தை தாங்க முடியவில்லை. 3 மாவட்ட ஆட்சியர்கள் மீட்பு  நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது தமிழக வெற்றிக் கழகத்தின் கடமை.  கட்டுக்கடங்காத கூட்டம் வரும்போது தலைவர்கள் குறித்த நேரத் தில் வர வேண்டும்” என்று விமர்சனத்தைப் பதிவு செய்தார்.

ஓட்டம் பிடித்தவரின்

குமுறல்’ கரூர் துயரச் சம்பவம் நடந்த போதே சென்னைக்கு ஓட்டம் பிடித்துவிட்ட தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக் கையில், “கற்பனைக்கும் எட்டாத வகை யில், கரூரில் நிகழ்ந்ததை நினைத்து, இதய மும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக் கும் சூழல்” என்று தெரிவித்தார். “நம் உறவு களை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேத னையை எப்படிச் சொல்வதென்றே தெரிய வில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

நிவாரண அறிவிப்புகள்

தமிழக அரசு அறிவிப்பு

முதலமைச்சர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாயும் அறிவித்துள்ளார்.

விஜய்யின் அறிவிப்பு

தவெக தலைவர் விஜய் உயிரிழந்தவர்களுக்கு  20 லட்சம் ரூபாயும், சிகிச்சை பெறுபவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

பிரதமரின் அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்தார்.


வழக்குப் பதிவு
கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக தவெக  பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இணைச் செயலாளர் சி.டி.நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழ கன் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் மீது குற்றமற்ற கொலை செய்ய முயற்சி, மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்து தல், பொது அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்படியாமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஆணைய விசாரணை

கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க அருணா  ஜெகதீசன் தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி  அருணா ஜெகதீசன் சம்பவ இடத்தை ஆய்வு செய்ய கரூ ருக்கு வந்து விசாரணையை தொடங்கினார்.

கரூரில் முழு அடைப்பு

தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தால் ஏற்பட்ட கூட்ட  நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு அடைப்பு நடத்தப்பட்டது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப் பின் தலைவர் விக்கிரமராஜா அறிவித்தபடி அனைத்து வணிக நிறுவனங்களும் முழுமையாக அடைக்கப்பட்டன.

அரசு நிகழ்ச்சிகள் ரத்து

கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரத்தையடுத்து, ஞாயிற் றுக்கிழமையும், திங்கட்கிழமையும் அரசு நிகழ்ச்சி கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.பலியானவர்களுக்கு  அஞ்சலி செலுத்தும் விதமாக முதல்வர் ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார். அதே போல், நடைபெறவிருந்த திமுகவின் அனைத்து நிகழ்ச்சி களும் ஒத்திவைக்கப்பட்டன.