தமிழகத்தில் பாஜக ஆசை நிறைவேறாது
அமித் ஷாவுக்கு அமைச்சர் கே.என். நேரு பதிலடி
திருநெல்வேலி: திரு நெல்வேலியில் பாஜக வின் தென் மண்டல பூத் கமிட்டி மாநாட்டில் கலந்து கொண்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “வருகிற சட்ட மன்றத் தேர்தலில் திமுக அரசை வேரோடு பிடுங்கி அகற்றுவோம்” என்று கூறினார். உதய நிதி ஸ்டாலின் ஒரு நாளும் முதலமைச்சராக வர முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், அமித் ஷாவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நெல்லையில் நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியா ளர்கள் சந்திப்பில் கூறிய தாவது: விவசாயத்தில் மட்டும் தான் வேரோடு அகற்ற முடியும். எங்களை எது வும் செய்ய முடியாது. வேரோடு பிடுங்கி எறிந் தால் திமுக பெரிதாக முளைக்கும். அமித் ஷாவே நினைத்தாலும் திமுகவை தோற்கடிக்க முடியாது என்றும், 15 ஆண்டுகளாக அந்த வேலையைத் தான் அவர்கள் செய்கிறார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது என்றும், தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தலை மையிலான திமுக கூட்டணிதான் வெற்றி பெற்று வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். பாஜகவினர் ஆசை ஒருபோதும் நிறைவே றாது என்றும், திமுக விற்கு போட்டியே கிடை யாது என்றும் அமைச்சர் நேரு தெரிவித்தார். மக்களின் பெரும் ஆதர வால் வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல மைச்சர் ஆவார் என்றும் அவர் கூறினார்.