tamilnadu

img

தூத்துக்குடி மக்கள் ஒற்றுமைப் பிரச்சாரத்தில் பாஜக குண்டர்கள் புகுந்து தாக்குதல்

தூத்துக்குடி மக்கள் ஒற்றுமைப் பிரச்சாரத்தில் பாஜக குண்டர்கள் புகுந்து தாக்குதல்

சிஐடியு - விவசாயத் தொழிலாளர் சங்கம் கண்டனம்

 

சென்னை, செப். 5 - வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு, மக்கள் ஒற்றுமைப் பிரச்சார இயக்கம் நடத்திய சிஐடியு, விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் மீது பாஜக குண்டர்கள் அராஜகமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  ‘சாதி - மத மோதல்கள் வேண்டாம், மக்கள் ஒற்றுமை காப்போம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து, சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகிய அமைப்புகள் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு வருகின்றன. விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 154-ஆவது பிறந்த தினமான செப்டம்பர் 5 துவங்கி, மகாகவி பாரதி நினைவு தினமான செப்டம்பர் 11 வரை ஒரு வார காலத்திற்கு- இந்த மக்கள் ஒற்றுமை பிரச்சாரத்திற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி செப்டம்பர் 5 காலை 9 மணிக்கு ஒட்டப்பிடாரம் வஉசி இல்லத்திலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, பிரச்சாரம் துவங்கியது. அடுத்து தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு வஉசி சிலைக்கு மாலை அணிவித்து, ‘சாதி - மத மோதல்கள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை காப்போம்’ என்று தோழர்கள் முழக்கங்களை எழுப்பினர்.  அப்போது, அங்கு வந்த பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்க வந்தால் வ.உ.சி. பற்றி மட்டுமே பேச வேண்டும்; வேறு எதையும் பேசக்கூடாது என்று கூறி தோழர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பாஜக பிரமுகர் சொக்கலிங்கம் என்பவர் கூடியிருந்த சிஐடியு, விவசாயிகள் சங்கத் தோழர்களிடையே புகுந்து மைக்கைப் பிடுங்கி,  முன்வரிசையில் நின்ற தோழர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.  பாஜகவின் தூத்துக்குடி கிழக்கு மண்டலத் தலைவர் ராஜேஷ் கனி என்பவரும், அவருடன் வந்த நபர்களும் இதேபோல தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர், தாமதமாகவே தலையீட்டு அமைதியை ஏற்படுத்தியுள்ளனர். 

அடாவடி தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய கோரிக்கை

தூத்துக்குடியில் பாஜக குண்டர்களின் அராஜக அடாவடித்தனத்திற்கு, சிஐ டியு-வின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில்  அதன் மாநிலத் தலைவர் அ. சவுந்தர ராசன், பொதுச்செயலாளர் ஜி. சுகுமாறன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  “எதைப்பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்பதை பாஜகவினர் தான் முடிவு செய்வார்கள் என்ற சூழலை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது. சுதந்திரத்திற்கு எந்தப் பங்களிப்பும் செய்யாத ஆர்எஸ்எஸ் - பாஜக அமைப்பினர், வஉசி பெய ரில் அரசியல் செய்வது சந்தர்ப்பவாதம்  என்பதை சிஐடியு சுட்டிக்காட்டுகிறது. தொழி லாளர் வர்க்க போராட்டத்தை சிதைக்க முயற்சி  செய்யும் சங்- பரிவார் அமைப்புகளை  தொழிலாளர்கள் புறக்கணிக்க வேண்டும்;  சிஐடியு, விவசாயிகள் மற்றும் விவசாயத்  தொழிலாளர்கள் சங்கத் தலைவர் மீது  தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து  நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும்  அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சாதி - மதத்தைத் தூண்டி மக்களைப் பிரிக்கும் பாஜக

அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத் தின் மாநிலத் தலைவர் எம். சின்னதுரை எம்எல்ஏ, பொதுச்செயலாளர்  வீ. அமிர்தலிங்கம் ஆகி யோரும், பாஜக-வின் அராஜகத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். “இந்திய நாட்டின் உழைப்பாளி மக்கள் உள்ளிட்ட 142 கோடி மக்களின் நலன்களை கார்ப்ப ரேட்டுகளிடம் அடகு வைத்து விட்டு, அமெரிக்க ஏகாதி பத்தியத்திடம் மண்டியிட்டு கிடக்கும் ஒன்றிய பாஜக  அரசு, தங்களின் இயலாமையை மறைக்க சாதி -  மத பிரிவினையைத் தூண்டி, மக்கள் ஒற்றுமையை நாளும் சிதைத்துக் கொண்டிருக்கிறது.  இந்நிலையில், மக்கள் ஒற்றுமைக்கான  பிரச்சாரத்தில் ஈடுபட்ட சிஐடியு, விவசாயிகள் - விவ சாயத் தொழிலாளர்களை, சனாதனம், வகுப்புவாதம் பற்றியெல்லாம் பேசக்கூடாது என்று தடுத்து தாக்கி யுள்ளது. பாஜகவினரின் இந்த கேடுகெட்ட ஜனநாயக  விரோத - அராஜக நடவடிக்கையை அகில இந்திய  விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது” என்று  அவர்கள் தங்களின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.