tamilnadu

img

திருநங்கைகள் குடியிருந்த வீட்டை இடித்து பாஜக நிர்வாகி அட்டூழியம்!

கோயம்புத்தூர், செப்.25- சூலூர் அருகே திருநங்கைகள் குடி யிருந்த வீட்டை பாஜக நிர்வாகி அடித்து நொறுக்கிய சம்பவம் குறித்து காவல் துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள மயிலம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மனோன்மணி. இவர் பாஜக வின் சூலூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாள ராக உள்ளார். இவருக்கு சொந்தமான வீடு மயிலம்பட்டி பகுதியில் உள்ளது. இந்த வீட்டில் ஏஞ்சலினா உட்பட 2 திருநங்கை கள் வாடகைக்கு இருந்து வந்தனர். கடந்த 5 வருடங்களாக திருநங்கைகள் அங்கு  குடியிருந்து வரும் நிலையில், மனோன்மணி அவர்களை காலி செய்யுமாறு கூறியுள்ளார். அதற்கு திருநங்கைகள் தங்கள் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திருப்பி தந்தால் காலி செய்வதாக கூறியுள்ளனர். தொடர்ந்து கடந்த 6 மாதங்களாக இந்த  பிரச்சனை நடந்துகொண்டிருக்கும் நிலை யில், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் சூலூர் காவல் நிலையத்தில் திருநங்கைகள் புகாரளித்துள்ளனர். இந்நிலையில், ஞாயிறன்று ஏஞ்சலினா சந்தைக்கு சென்றிருந்த நிலையில், மனோன்மணி 4 பேர் கொண்ட கும்பலுடன் சென்று திருநங்கைகள் குடியிருந்த வீட்டின் சிமெண்ட் கூரைகளை பிரித்து துவம்சம் செய்தனர். இதையடுத்து திருநங்கைகள் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார் மனோன்மணியால் அழைத்துச் செல்லப்பட்ட நபர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட திருநங்கை கள் கூறுகையில், நாங்கள் தங்கியிருந்த வீட்டை இடித்து, எங்களை நடுத்தெருவிற்கு மனோன்மணி கொண்டு வந்துள்ளார். மேலும், அந்த கும்பல் எங்களை தாக்கி, காயப் படுத்தியுள்ளனர், என கண்ணீர் மல்க தெரி வித்தனர். இந்நிலையில், திருநங்கைகள் தங்கியிருந்த வீட்டை உடைத்து நொறுக்கும் செல்போன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.