tamilnadu

கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு

வேதாரண்யம், ஜன.30 - நாகப்பட்டினம் மாவட்டம் வேதார ண்யத்தை அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயம் உலகப்புகழ் பெற்றது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை  பல்வேறு நாடுகளில் இருந்து 260 வகை பறவைகள் லட்சக்கணக்கில் வருவதுண்டு. பூநாரை, வண்ண நாரை, கூழைக்கிடா, சிறவி, கடல் காகம் உள்ளிட்ட பறவைகள் ஏராள மாக வந்துள்ளன. பறவைகளின் கணக்கெடுப்பு பணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள், வனத்துறையினர் திருச்சி  மண்டல வனப்பாதுகாவலர் சதீஸ் தலை மையில்  14 வழித்தடங்களில் சென்று பறவை களை கணக்கிட்டனர். மொத்த பறவைகளின் எண்ணிக்கை பின்னர் தெரிவிக்கப்படும் என  திருச்சி மண்டல வன பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.