பாரதியாரின் 104 ஆவது நினைவு தினம்
மன்னார்குடி, செப். 11- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க மன்னார்குடி கிளையின் சார்பில், மகாகவி சுப்ரமணி பாரதியாரின் 104 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, மன்னார்குடி மேலநாகையில் உள்ள பாரதியார் நினைவு மண்டபத்தில் பாரதியாரின் உருவ சிலைக்கு மாலையணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், கிளைத் தலைவர் வீ. கோவிந்தராஜ், செயலாளர் கி. அகோரம் மாவட்ட துணைச் செயலாளர் கா. பிச்சைக்கண்ணு, கிளை துணைத் தலைவர்கள் எஸ். சந்திரசேகரன், சரஸ்வதி, தாயுமானவன், சித்தேரி, சந்திரசேகரன், கிளை செயற்குழு உறுப்பினர்கள் அ. காளிமுத்து, பாரதி, பூமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னை நகரச் செயலாளர் ஜி. தாயுமானவன் ஆகியோர் பங்கேற்றனர். கிளைத் தலைவர் வீ. கோவிந்தராஜ் மாவட்ட துணைச் செயலளர் கா. பிச்சைக்கண்ணு ஆகியோர் உரையாற்றினர்.