tamilnadu

img

பெனிபிட் பண்ட் மகா சபை கூட்டம்

பெனிபிட் பண்ட் மகா சபை கூட்டம்

பாபநாசம், செப்.27- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட்டின்  31 ஆம் ஆண்டு மகா சபை கூட்டம் நடைபெற்றது. முதன்மை  செயல் அலுவலர் ஆறுமுகம் தலைமை வகித்து 2024-2025  ஆண்டிற்கான இருப்பு நிலைக் குறிப்பு, லாப நட்ட கணக்கை வாசித்தார்.  முன்னதாக பாபநாசம் கிளை மேலாளர் ஏசுதாஸ் அறிவழ கன் வரவேற்றார். பூண்டி புஷ்பம் கல்லூரி ஓய்வு முதல்வர்  ராஜேந்திரன் தீர்மானங்களை வாசித்து, உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்றார். இதில் பாபநாசம் சுற்று வட்டாரப் பகுதி களைச் சேர்ந்த தனியார், அரசு, அரசு உதவிபெறும் பள்ளி களில், பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ஷீல்டு, ஊக்கத் தொகை வழங்கப் பட்டது. மூத்த உறுப்பினர்கள் கெளரவிக்கப் பட்டனர்.  செல்வராஜ், சம்பந்தம், கலைச்செல்வன், மோகன், துரை சாமி, இயக்குநர் வல்வில் ஓரி, சேரலாதன், லயன்ஸ் கிளப்  தலைவர் ஜெகதீசன், வட்டாரத் தலைவர் முத்தமிழ்ச் செல்வம், முன்னாள் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான உறுப்பி னர்கள், இயக்குநர்கள் கலந்து கொண்டனர். அய்யம்பேட்டை  கிளை மேலாளர் விமல்ராஜ் நன்றி கூறினார்.