கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை 2 ஆண்டுகளில் மெட்ரோவிடம் மாற்றப்படும்
மெட்ரோ நிர்வாக இயக்குநர் சித்திக் தகவல்
சென்னை, ஆக. 8- சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரையில் உள்ள பறக்கும் ரயில் சேவை இன்னும் இரண்டு ஆண்டுகளில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் மாற்றப்படும் என்று அதன் நிர்வாக இயக்குர் சித்திக் கூறியுள்ளார். சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மெட்ரோ ரயில் மக்களைச் சென்றடைய வேண்டும் எனத் தொடர்ந்து முயற்சி செய்து வரு கிறோம். வாட்ஸ்-அப், டிஜிட்டல் பரி வர்த்தனை செயலிகள் எனப் பல வழிகளில் மெட்ரோ பயணச்சீட்டுகளை வழங்கி வருகிறோம். கூகுள் மேப்ஸையும் இணைப்பதற்கான பணி களை மேற்கொண்டு வருகிறோம்.
விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். அது பரிசீலனையில் உள்ளது. ஒன்றிய அரசின் ஒப்புதலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நிச்சயம் ஒப்புதல் கிடைக்கும். அதற்கு தேவை யான நிலம் எடுக்கும் பணிகளும் மற்ற பணிகளும் நடைபெற்று வரு கின்றன.
சென்னையில் நீர்வழி போக்குவரத்து
சென்னையில் நீர்வழி மெட்ரோ போக்குவரத்து சாத்தியம் தான். நெடுஞ்சாலைத் துறையும், சிறு துறைமுகங்கள் துறையும் அதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளன; பொறுத்திருந்து பார்ப்போம். மதுரை, கோவை நிலம் எடுப்பு கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை 2 ஆண்டுகளில் படிப்படியாக மெட்ரோவிடம் மாற்றப்படும். இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும். முதலில் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப் படும். அதைத் தொடர்ந்து ரயில் பெட்டிகளை மாற்றுவது என பணிகள் மேற்கொள்ளப்படும். முழுமையாகப் பணிகள் முடிய இரண்டரை ஆண்டு களாகும். அதுவரை புறநகர் ரயில்கள் வழக்கம்போல இயங்கும். மதுரை, கோவையில் நிலம் எடுப்பு பணிகளுக்கு 2 ஆண்டுகள் ஆகும். இப்போது நிலத்தை அடையாளம் காணும் பணி, அரசின் ஒப்புதலைப் பெறுவது ஆகிய பணிகளைத் தொடங்கிவிட்டோம். ஒன்றிய அரசின் ஒப்புதல் கிடைக்க காலதாமதம் ஏதும் இல்லை; வழக்கமான காலம்தான் எடுக்கிறது. 2-ம் கட்ட மெட்ரோ பணியில் ஒரு வழித்தடம் டிசம்பர் மாதம் பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அடுத்தடுத்த 6 மாதங்களில் அடுத்தடுத்த வழித்தடங்களை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.