அதானி நிறுவன மோசடிகள் குறித்து எழுதக் கூடாதா பத்திரிகையாளர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
தில்லி நீதிமன்றம் உத்தரவு
புதுதில்லி, செப். 18 - அதானி நிறுவனம் பற்றி எழுத பத்திரிகையாளர்களுக்கு விதிக்கப் பட்ட தடை உத்தரவுக்கு தில்லி மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கவுதம் அதானியின் அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் (AEL) குறித்த சமூக ஊடகப் பதிவுகளை நீக்க வேண்டும் என்று தில்லி உரிமையியல் சிறப்பு நீதிமன்றத்தில் அந்த நிறு வனம் வழக்கு தொடர்ந்தது. கடந்த செப்டம்பர் 6 அன்று இந்த வழக்கை விசாரித்த உரிமையியல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அனுஜ் குமார் சிங், அதானி நிறுவனம் குறித்து எழுதுவதற்கு, பரஞ்ஜாய் குஹா, ரவி நாயர், அபிர் தாஸ் குப்தா, அயஸ்காந்த் தாஸ், ஆயுஷ் ஜோஷி உள்ளிட்ட 9 பத்திரிகையாளர்கள், ஆர்வலர் களுக்கு தடை விதித்தார். மேலும், ஏற்கெனவே வெளியிடப்பட்ட வீடி யோக்களையும் ஐந்து நாட்களுக்குள் நீக்க உத்தரவிட்டார். இதன்படி, அதானி எண்டர்பி ரைசஸ் லிமிடெட் குறித்த 138 யூடியூப் இணைப்புகள் மற்றும் 83 இன்ஸ்டா கிராம் பதிவுகளை நீக்க நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் அதானி நிறுவனம் குறித்த புல னாய்வு அறிக்கைகள், நையாண்டி வீடி யோக்கள் உள்ளிட்டவை அடங்கும். நியூஸ்லாண்ட்ரி, தி வயர் உள்ளிட்ட செய்தி நிறுவனங்களுக்கும், ரவிஷ் குமார், அஜித் அஞ்சும், துருவ் ரதீ மற்றும் நையாண்டி கலைஞர் ஆகாஷ் பானர்ஜி உள்ளிட்டோருக்கு இதற்கான நோட்டீஸ்கள் அனுப்பப் பட்டன. இந்த நோட்டீசின் நகல்கள் மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங் களுக்கும் அனுப்பப்பட்டன. ஆனால், உரிமையியல் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, தில்லி மாவட்ட நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்கள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்த னர். இந்த மனுக்கள் வியாழனன்று விசாரணைக்கு வந்தன. அப்போது, பத்திரிகையாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிருந்தா குரோவர், அவசர அவசர மாக பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்க வேண்டிய அவசியம் என்ன? 2024 ஜூன் மாதம் முதலே அதானி நிறு வனம் தொடர்பான விமர்சனக் கட்டுரைகள் பொதுவெளியில் உள்ளன. அதானி குறித்த ஒரு கட்டு ரை, கென்யா நாட்டு அரசு தெரி வித்த தகவல்களை அடிப்படை யாகக் கொண்டது. கென்யா அரசும், சுவிட்சர்லாந்து நீதிமன்றமும் அறி யாமையில் தீர்ப்பளித்துள்ளனவா? பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை முன்னெடுத்துச் செல்லும் முக வர்களாக இருப்பவர்கள் பத்திரிகை யாளர்கள் தான். அவ்வாறிருக்க அவ ர்களுக்கு தடை விதிக்கக் கூடாது என்று வாதிட்டார். இதையடுத்து, அதானி குறித்து எழுதுவதற்கு 4 பத்திரிகை யாளர்களுக்கு கீழமை நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவுக்கு தில்லி மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஆஷிஷ் அகர்வால், இடைக்கால தடை விதித்தார். பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கும் முன்பு அவர்களது கருத்தை கீழமை நீதிமன்றம் கேட்காதது தவறு. பொதுவெளியில் இருந்து வரும் அதானி நிறுவனங்கள் குறித்த கட்டுரைகளை அகற்றக் கூறியதும் தவறு என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.