பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்
இராஜபாளையம்,அக்.17- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தீயணைப்பு நிலையம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட வேண்டிய அவசி யம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். இராஜபாளையம் திருவள்ளுவர் தெரு அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நிலைய தீயணைப்பு அலுவலர் ஜே.செல்வ ரத்தினம் தலை மையில் தீயணைப்பு வீரர்கள் பல்வேறு வழிகளில் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடும்படியும், பட்டாசுகளை கையா ளுவது குறித்தும் விளக்கமாக எடுத்து ரைத்தனர். மாணவ, மாணவிகளின் கேள்வி களுக்கு பதில் அளித்தனர்.
