கலைமகள் கல்லூரியில் விழிப்புணர்வு முகாம்
மயிலாடுதுறை, அக். 14- மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சொசைட்டி ஃபார் ரூரல் டெவலப்மெண்ட் நிறுவனம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து நடத்திய சிறப்பு முகாம் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் வரவேற்றுப் பேசினார். மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதைப்பொருட்கள் பயன்படுத்துபவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, சமூக ஆர்வலர் டாக்டர். மகாகிருஷ்ணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூக பணியாளர் ஆரோக்கியராஜ் உரையாற்றினர். விழிப்புணர்வு முகாமில் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். சொசைட்டி ஃபார் ரூரல் டெவலப்மெண்ட் தொண்டு நிறுவனத்தின் ராஜசேகர் நன்றி கூறினார்.
