tamilnadu

img

கோயில் சாலைகளில் இந்து அல்லாதோர் வாகனங்களை இயக்க சங்பரிவார் தடை

மங்களூரு, ஜுன் 5- தட்சிண கன்னடாவில் உள்ள பிர சித்தி பெற்ற கோவிலுக்கு செல்லும் சாலையில் இந்து அல்லாத வாகனங் கள் செல்ல தடை விதித்து சங்பரிவார் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். பெல்தங்காடி தெற்கு மகாகணபதி கோயிலுக்குச் செல்லும் சாலையில் கன்னட மொழியில் இவ்வாறு 2 பல கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தர்மஸ்தலா கொக்கடாவில் உள்ள விஷ்வ ஹிந்து பரிக்ஷத், பஜ்ரங் தள் மற்றும் இந்து ஜாக்ரனா வேதி ஆகிய வற்றின் பெயரால் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. “லவ் ஜிஹாத்”  போன்ற செயல்களைத் தடுக்கும் வகை யில், முஸ்லீம் அல்லாதவர்கள் ஓட்டும்  ஆட்டோ, டாக்சி உள்ளிட்ட வாகனங்க ளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறி விப்பில் கூறப்பட்டுள்ளது. அறிவிப்பு பலகை கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இல்லை என்றும் எதுவும் செய்ய முடியாது என்றும் கோயில் நிர்வாகிகள் கூறுகின்றனர். முன்னதாக, கர்நாடகாவில் கோயில்  திருவிழாக்களில் முஸ்லிம் வியாபாரி கள் வியாபாரம் செய்ய சங்க பரிவா ரம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.