சென்னை,ஜன.6- தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு செய்தி மக்கள் தொடர்பு துறையின் டிஐபிஆர் யூடியூப் மற்றும் அரசு கேபிள் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. நடப்பாண்டுக்கான சட்டப் பேரவை முதல் கூட்டம் கலைவா ணர் அரங்கில் ஜன.5 அன்று தொடங்கியது. ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், வியாழனன்று (ஜன.6) சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியதும் பேரவைத் தலைவர் மு. அப்பாவு அறிப்பு ஒன்றை வெளியிட்டார். நாடாளுமன்ற ஜனநாயகத்தை காப்பற்ற வேண்டும் என்பதில் உறுதிக்கொண்டுள்ள நமது முதலமைச்சர், தான் கொடுத்த வாக்குறுதிகயை நிறைவேற்றும் வகையில், சட்டமன்ற பேரவை நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய ஆலோசனைகளை வழங்கி யுள்ளார். அதன் முதல் கட்டமாக, இந்த நிலையில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான (வியாழக்கிழமை) சட்டப் பேரவையில் நடக்கும் கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளி பரப்பு செய்யப்படுகிறது என்றார்.