காரகஸ், ஜன.5- தங்களின் மனிதவிரோத குற்றங்களை அம்பலப்படுத்திய தால் கடுமையான துன்புறுத்தலு க்கு அசாஞ்சேயை அமெரிக்கா ஆளாக்கியுள்ளது என்று பியூப்லா குழு கருத்து தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியப் பத்திரிகை யாளரும். விக்கிலீக்ஸ் இணைய தளத்தைத் துவக்கியவருமான ஜூலியன் அசாஞ்சேவுக்கு எதி ராக அமெரிக்கா பல நடவடிக்கை கள் எடுக்க முயன்று வருகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் அமெரிக்கா ராணுவம் நடத்திய மனித விரோதத் தாக்கு தல்களை 2010 ஆம் ஆண்டில் அசாஞ்சே அம்பலப்படுத்தினார். இவற்றை அம்பலப்படுத்தியது, அமெரிக்கச் சட்டப்படி குற்றம் என்று கூறி அவர் மீது 18 வழக்கு களை அமெரிக்கா பதிவு செய்துள் ளது. தற்போது பிரிட்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக் கப்பட்டுள்ள அசாஞ்சே, பல உடல்நலக் குறைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்து வது தொடர்பான வழக்கு விசார ணைக்கு வரவுள்ளது. அங்கு அனுப்பப்பட்டால் அவருக்கு 175 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும் வகையில் வழக்கு கள் பதிவு செய்யப்பட்டுள்ள தாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளன. இந்நிலையில் மெக்சிகோ வின் ஜனாதிபதியாகப் பொறுப் பேற்றிருக்கும் இடதுசாரித் தலை வர் மானுவல் ஓப்ரடார், அசாஞ்சேவுக்கு அடைக்கலம் தர முன்வந்திருக்கிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அசாஞ்சே விஷ யத்தில் மனிதாபிமான முறை யில் அமெரிக்கா அணுக வேண்டும். அவர் உடல்நல மில்லாமல் இருக்கிறார். அவர் எங்கு வாழ விரும்புகிறாரோ அங்கு அதைச் செய்ய நாம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். இதை தென் அமெரிக்க நாடு களைச் சேர்ந்த முற்போக்கு சிந்தனை கொண்ட தலைவர்க ளின் குழுவான பியூப்லா வர வேற்றுள்ளது. அமெரிக்காவின் அரசியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வரும் அசாஞ்சேவுக்கு அடைக்கலம் தர மெக்சிகோ முன்வந்திருப்பது நல்ல அம்சம் என்று பாராட்டியிருக்கிறார்கள்.