tamilnadu

கேட்டது ரூ.6,230 கோடி: கொடுத்தது ரூ.352 கோடி”

சென்னை,மார்ச் 25- வடகிழக்கு பருவமழையின்போது ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க ஒன்றிய பாஜக அரசிடம் ரூ.6,230 கோடி கேட்டதற்கு ரூ.352 கோடி மட்டுமே கொடுத்துள்ளது என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் விவாத்தின்போது பேசிய எதிர்க் கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், “பேரிடர் நிவாரணமாக ஒன்றிய அரசிடம் கேட்டது எவ்வளவு? அதில் வந்துள்ளது எவ்வளவு என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், “கடந்த 2021ஆம் ஆண்டு வட கிழக்குப் பருவமழையை ஒட்டி, தற்காலிக நிவாரணமாக ரூ.1,510 கோடி, நிரந்தர சீரமைப்புக்காக ரூ.4,720 கோடி உட்பட மொத்தம் ரூ.6,230.45 கோடி ஒன்றிய  அரசிடம் கேட்கப்பட்டது. ஆனால், தற்போது வரை ரூ.352.35 கோடியை மட்டுமே விடுத்திருக்கிறது” என்றார். பின்னர் நிதி அமைச்சர் பழனிவேல்  தியாகராஜன் தனது பதில் உரையின்போது, பாஜக உறுப்பினர்களைப் பார்த்து, ‘‘இந்த நிதியை ஒன்றிய அரசிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும்’’ என்றார்.