tamilnadu

img

செயற்கையாக ஏற்றப்பட்ட கடன்சுமை ரூ. 49 ஆயிரம் கோடி ஒன்றிய அரசின் வஞ்சகத்தால் ரூ.3.17லட்சம் கோடி இழப்பு!

செயற்கையாக  ஏற்றப்பட்ட கடன்சுமை ரூ. 49 ஆயிரம் கோடி ஒன்றிய அரசின் வஞ்சகத்தால் ரூ.3.17லட்சம் கோடி இழப்பு!

இடைக்கால பட்ஜெட் உரையில் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

ஓரவஞ்சனைகளை மீறி சாதனை முதலமைச்சர் பெருமிதம்

2026-27  நிதிநிலை அறிக்கை தொடர்பாக தமது சமூகவலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.  அதில் அவர் கூறியிருப்பதாவது: “’இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்’ என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி, அவர்களது வஞ்சகங்களைத் திறமையாகக் கையாண்டு, வளர்ச்சியில் சாதனை படைத்திருக்கும் ஐந்தாண்டுகளை நிறைவு செய்கிறோம்! ஜூலை மாதம் திமுக 2.0-வில் புதிய அறிவிப்புகளுடன் இன்னும் பிரமாண்டமான சாதனைகளுக்கு அடித்தளமிடும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வோம்!”. இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும், “நமது அரசின் சாதனைகளில் சிலவற்றையும் - ஒன்றிய பாஜக அரசு செய்துவரும் ஓரவஞ்சனைகளில் சிலவற்றையும் உங்களின் பார்வைக்குப் பகிர்கிறேன்” என்று குறிப்பிட்டு, அதுதொடர்பான சில புகைப்படங்களையும் முதலமைச்சர் பகிர்ந்துள்ளார்.

சென்னை, பிப். 17 - தமிழ்நாடு அரசின் 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாய்க் கிழமை (பிப்.17) காலை 9:30 மணிக்கு  தாக்கல் செய்தார். அப்போது, இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளா தார மாநிலமாகவும், நாட்டிலேயே இரட்டை இலக்க உயர் பொருளா தார வளர்ச்சியை அடைந்த பெருமைக் குரிய மாநிலமாகவும் தமிழ்நாடு உரு வெடுத்திருப்பதாக பெருமிதம் தெரி வித்த நிதியமைச்சர், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் மகளிர், மழலையர், முதியோர், தொல்  பழங்குடியினர், மாற்றுத் திறனாளி கள் என கடைக்கோடி தமிழரும் வளர்ச்சிப் பயணத்தில் பங்கெடுக்கும் சூழல் உருவாகி இருக்கிறது.  ஏற்றுமதியைப் பெருக்கி, பண வீக்கத்தைக் குறைத்து, வறுமை யை ஒழிப்பதற்கான இறுதிக் கட்டத்தை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது” என்றும் குறிப்பிட் டார். அதேநேரம், இந்த மாபெரும் பயணத்திற்கு இடையே, ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டே தமிழ்நாட்டின் நிதி நிலையில் செயற்கையான நெருக்கடியை உருவாக்கி, பல்வேறு வகைகளில் தமிழ்நாட்டை வஞ்சித்து வருவதாகவும் வேதனை தெரிவித்தார். இதனை உரிய புள்ளி விபரங்களுடனும்நிதியமைச்சர் அம்பலப்படுத்தினார். மாற்றான் தாய் மனப்பான்மை - வரி இழப்பிலிருந்து நிதி பறிப்பு வரை! ஒன்றிய பாஜக அரசின் மாற்றான் தாய் மனப்பான்மை எவ்வாறு தமிழ்நாட்டை பல்வேறு கோணங்களிலும் பாதிக்கிறது என்பதை அமைச்சர் விளக்கமாக எடுத்துரைத்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது: “மாநிலங்களின் ஆட்சேபணைகளை காற்றில்  பறக்கவிட்டு, சரக்கு மற்றும் சேவை வரி விகி தங்கள் சீரமைக்கப்பட்டதால் நடப்பு ஆண்டு மட்டுமே தமிழ்நாட்டுக்கு ரூ.9,600 கோடி வரு வாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  அதோடு நில்லாமல், 2025 ஏப்ரல் மாதம் மாநில அரசிடம் எவ்வித முன்னறிவிப்போ, ஆலோச னையோ இல்லாமல் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி கணக்கிலிருந்து ரூ. 1,209  கோடியை ஒன்றிய அரசு பிடித்தம் செய்து கொண்டது. மேலும் 2025-26 ஆம் ஆண்டு ஒன்றிய பட்ஜெட் திருத்த மதிப்பீட்டில் தமிழ்நாட்டுக்கு உரிய வரிப்பங்கு குறைக்கப்பட்டதால் ரூ. 1,202 கோடி கூடுதல் இழப்பு தனியே ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அரசியல் சாசனத்தையும்  ஆயுதமாக்கும் ஒன்றிய அரசு! அரசியலமைப்பு பிரிவு 293(3)-ஐ தனது ஆயுதமாக்கிய ஒன்றிய அரசு, மாநில அரசு களுக்கு கடன் திரட்ட அனுமதி வழங்கும் அதி காரத்தை பயன்படுத்தி முன்னறிவிப்பின்றி ஒரு நிபந்தனையை திணித்தது. நிலுவையிலுள்ள உத்தரவாதங்களில் 5 சதவிகிதத்தை உத்தரவாத மீட்பு நிதியத்திற்கு மாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தால் மட்டுமே ரூ. 3,087 கோடி கூடுதல் செலவு திணிக்கப்பட்டுள்ளது. அதே பிரிவை மீண்டும் பயன்படுத்தி, தமிழ்நாடு  மின் பகிர்மானக் கழகத்திற்கு ரூ. 16,290 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு ஏற்பட்ட இழப்பு வெறும் ரூ. 413 கோடி மட்டுமே. இந்த ஒற்றை நிபந்தனையால் மட்டுமே மாநில அரசுக்கு நடப்பு  ஆண்டில் ரூ. 15,877 கோடி கூடுதல் சுமை  திணிக்கப்பட்டுள்ளது என்பது அதிர்ச்சியளிக்கிறது. பெரிய திட்டங்களை மறுத்து, உரிய நிதியையும் தடுத்து நிறுத்தும் சதி! சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியும், தனது கணக்குகளில் காட்டியிருக்க வேண்டிய ரூ.9,526 கோடியை இன்னும் வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கிறது.  அதேபோல் ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்திற் கான மானியம் ரூ. 3,548 கோடி, ஜல் ஜீவன் இயக்கத்திற்கு ரூ. 3,112 கோடி, ஊரக உள்ளாட்சி  அமைப்புகளுக்கு ஒன்றிய நிதிக்குழு பரிந்து ரைப்படி வழங்கப்பட வேண்டிய ரூ.2,246 கோடி என ஒன்றிய அரசின் பங்கான சுமார் ரூ.9,500 கோடி தொடர்ந்து நிலுவையிலேயே நீடிக்கிறது. ரூ.10.62 லட்சம் கோடியை தொடும் கடன் சுமை! இவ்வாறு பல்வேறு வழிகளிலும் தடைகளை ஏற்படுத்தி வரும் ஒன்றிய பாஜக அரசால் தமிழ்நாட்டுக்கு மொத்தம் ரூ. 48,892 கோடி கடன் சுமை செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளது. 2025-26 நிதியாண்டின் வரவு - செலவுத் திட்ட  மதிப்பீட்டில் ரூ. 9,29,959 கோடியாக இருந்த  மாநிலத்தின் ஒட்டுமொத்தக் கடன், திருத்த மதிப்பீட் டில் ரூ. 9,52,374 கோடியாக உயர்ந்துள்ளது. 2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில் இது ரூ. 10,62,248 கோடியாக உயரும் என  மதிப்பிடப்பட்டுள்ளது. செயற்கையாக திணிக்கப் பட்ட சுமைகளை நீக்கினால், திருத்த மதிப்பீட்டில் கடன் ரூ.9,42,851 கோடியாக மட்டுமே இருந்திருக்கும் என்பது கவனிக்கத்தக்கது. நிதிக்குழுவும் தமிழ்நாட்டுக்கு  அநீதியே செய்தது! ஒன்பதாம் நிதிக்குழு காலத்தில் 7.931 சத விகிதமாக இருந்த தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய வரிப்பங்கு தொடர்ந்து குறைக்கப் பட்டு இப்போது 4.079 சதவிகிதமாக சுருங்கி யுள்ளது. இதனால் மட்டுமே தமிழகத்துக்கு ரூ. 3.17 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது மாநிலத்தின் மொத்த நிலுவைக் கடனில் 33 சதவிகிதத்திற்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது. பதினாறாம் நிதிக்குழு பரிந்துரைகளில் அண்டை மாநிலமான கேரளத்துக்கு 23.74 சத விகிதமும், கர்நாடகத்திற்கு 13.27 சதவிகிதமும் உயர்வு வழங்கப்பட்டிருக்கும்போது, தமிழ்நாட்டுக்கு வெறும் 0.44 சதவிகித உயர்வு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.  ‘நாம் பெருந்தன்மையை எதிர்பார்க்க வில்லை; சமநிலை உறுதி செய்யும் நியாயத்தை மட்டுமே கேட்கிறோம்’. நாடே திரும்பி பார்க்கும்  நல்லாட்சியின் சாதனை! இவ்வளவு அநீதிகளுக்கு இடையிலும் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் 1 கோடியே 31 லட்சம் பெண்களுக்கு ஒரே நேரத்தில் ரூ. 5,000 விகிதம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் சிறப்புத் தொகையாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட போது, இந்த நாடே திரும்பி பார்த்தது.  ஒன்றிய அரசின் மாற்றான் தாய் மனப்பான்மை யையும் தாண்டி, அண்ணா - கலைஞர் வகுத்த சமூக நீதிப் பாதையில் வழுவாது பயணிப்பதே தமிழ்நாட்டின் உறுதிப்பாடு!” இவ்வாறு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது 158 பக்க அறிக்கையை சுமார் 2 மணி நேரம் 22 நிமிடங்கள் வாசித்தார்.