செயற்கைப் புரதப் பவுடர் ஆபத்தானது மருத்துவர் கு.கணேசன் எச்சரிக்கை
சென்னை, ஆக. 31- செயற்கைப் புரதப் பவுடர் மிக வும் ஆபத்தானது என மருத்துவர் கு. கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய நவீன உலகில் உடற்பயிற்சி இல்லாமல் கட்டு உடலை (ஜிம் பாடி) கொண்டு வர புரோட்டின் மாவு (செயற்கைப் புரதப் பவுடர்) முக்கியமான பொருளாக உள்ளது. இது உயிருக்கே மிகவும் ஆபத்தானது என்றாலும், இளைஞர்கள் செயற்கைப் புரதப் பவுடரை உட்கொண்டு வரு கின்றனர். இந்த பவுடர் உடலில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் உடல் நலத்துக்கு தீங்கானது. இந்நிலையில், புரோட்டின் பவுடர் எல்லோரும் சாப்பிடுவது அவசியமா? என்ற வார இதழின் கேள்விக்கு மருத்து வர் கு.கணேசன் அளித்த பதிலில், “புரதப் பற்றாக்குறை நம்மிடையே பொதுவான பிரச்சனையாக இருக்கும்போது, உணவுகள் மூலம் புரதங்களை எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக, செயற்கையாகத் தயாரிக்கப் படும் புரதப் பவுடர்களை உட்கொள் ளும் பழக்கம் வந்திருக்கிறது. இன்றைய அவசர உலகத்தில் பலரும் இயற்கைப் புரத உணவுக்குப் பதி லாகச் செயற்கைப் புரதப் பவுடரை அருந்திவிட்டுச் செல்வது நடக்கிறது. ஆனால், இந்த உணவுப் பழக்கம் மிக வும் ஆபத்தானது என்று எச்சரிக்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம். அதனால் இதனை தவிர்ப்பது நல்லது” என அவர் கூறினார்.
