திருச்சூர், பிப்.8- கேரளா கலா மண்டலத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றவும், தன்னிறைவு அடையச் செய்யவும் திட்டங்கள் வகுக்கப்படும் என கலா மண்டலம் பல்கலைக்கழக வேந்தர் மல்லிகா சாராபாய் தெரிவித்தார். திருச்சூர் பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில், “கலையைத் தவிர, கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறைகளில் உள்ள அனைத்து சாத்தியக்கூறுகளும் பயன்படுத்தப்படும். அரசு நிதியை மட்டுமே நம்பியிருக்கும் நிலை மாற வேண்டும். நம்பிக்கைகளின் அடிப்படை யிலான நடனப் படைப்புகள் மூலம் பெண்களின் குரலை வெளிக்கொணர முயற்சிக்கப்படுகிறது. கலையில் மத, அரசியல் தலையீடு சிரமத்தை ஏற்படுத்தும். ஒன்றிய மோடி அரசுக்கு எதிராக குரல் கொடுத்ததற்காகவும், நிலைப்பாடுகளை அம்பலப் படுத்துவதாலும் நடன அரங்குகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. கலாமண்டலத்தில் இசை நடன விழாவின் முடிவில் குழந்தைகள் நடன விருந்து நடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் நிறுவனத்தை பாதிக் காது. குழந்தைகள் ஏன் ஒன்றாக நடன மாடினார்கள் என்பதற்கு பல விவா தங்கள் எழுந்துள்ளன. அவையடக் கத்தை மட்டுமே பார்ப்பவர்களால் இது போன்ற விவாதங்கள் தூண்டப்படு கின்றன. காலம் மாறிவிட்டது. மக்களின் சிந்தனையும் மாற வேண்டும்” என்றார். கலாமண்டலம் துணைவேந்தர் டி.கே.நாராயணன், பதிவாளர் பி.ராஜேஷ்குமார், பத்திரிகையாளர் மன்றச் செயலர் பால் மேத்யூ, தலைவர் ஓ.ராதிகா ஆகியோர் உடனிருந்தனர்.