அறந்தாங்கி அரசு கல்லூரியில் கலைத் திருவிழா
அறந்தாங்கி, செப்.17 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில், தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறையின் சார்பில் கல்லூரி கலைத் திருவிழா நடை பெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை தலைமை வகித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கவிஞர் நா.முத்துநிலவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கல்லூரி கலைத் திருவிழாவைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். கவிதை, சிறுகதை, ஓவியம் மற்றும் வர்ணனைப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளுக்கு நடுவர்களாகப் பல்வேறு கல்லூரிகளிலிருந்து பேராசிரியர்கள் பலரும் பங்கேற்றனர். போட்டிகளில் கல்லூரி அனைத்துத் துறை சார்ந்த மாணவ-மாணவி யர் பங்கேற்றனர். விழாவில் கல்லூரி தமிழ்த் துறைத் தலை வர் முனைவர் கா.காளிதாஸ், ஆவுடையார் கோயில் அன்பாலயம் குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்தின் ஒருங்கிணைப்பாளர் மரம் ராஜா, பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவியர் பங்கேற்றனர். முன்னதாக கலைத் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் துறைப் பேராசிரியருமான முனைவர் ச.கணேஷ் குமார் வரவேற்றார். வரலாற்றுத் துறைத் தலைவர் ரா.பிரகதாம்பாள் நன்றி கூறினார். தமிழ்த் துறைப் பேராசிரியை ரா.ராஜலட்சுமி தொகுத்து வழங்கினார்.