தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்கள் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், ஜூலை 9 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய-இலங்கைக் கடல் எல்லையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடித் தொழிலை நம்பி பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளதை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் நன்கு அறிவார். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நமது மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து மீன்பிடிப் படகுகளைத் திரும்ப ஒப்படைக்கவும் ஒன்றிய அரசு, இலங்கை அதிகாரிகளுடன் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், தற்போது இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் சுமூகமான நட்புறவு பேணப்பட்டு வரும் நிலையில், தூதரக நடவடிக்கைகள் மூலமாகத்தான் மீனவர்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்திடவும், சுமூகத் தீர்வு ஏற்படுத்த இயலும்.
மு.க.ஸ்டாலின் ,திமுக தலைவர்