tamilnadu

சிபிஎம் ஊழியரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த பி.சி.பட்டி பேரூராட்சி தலைவரை கைது செய்க!

தேனி, ஏப்.19-  தேர்தல் தோல்வி பயத்தில் சிபிஎம் ஊழியரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த அமமுகவைச் சேர்ந்த பழனி செட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மீதுன்  சக்கரவர்த்தி உள்ளிட்ட சமூக விரோதி களை கைது செய்ய வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தியுள்ளது.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில், ‘‘தேர்தல் வாக்குப்பதிவு நாளான வெள்ளிக்கிழமை பழனி செட்டிபட்டியில் உள்ள வாக்குச்சாவடிக்கு அருகே 200 மீட்டர் தூரத்தில் திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் நாற்காலி போட்டு, வாக்குச் சீட்டு இல்லாமல் வருபவர்களுக்கு  வாக்காளர் எண் விபரம் எழுதி கொடுத்து வந்தனர்.  அப்போது திமுக சார்பில் போடப்பட்ட இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேனி தாலுகா குழு உறுப்பினர் வீரமணி, காங்கிரஸ் கட்சி மாவட்டப் பொருளாளரும் முன்னாள் பேரூராட்சி தலைவருமான அப்பு என்ற பாலசுப்பிரமணி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் தேர்தல் பணியாற்றி வந்தனர்.  இதனால் ஆத்திரமடைந்த அமமுகவைச் சேர்ந்த பேரூராட்சி தலை வர் மீதுன் சக்கரவர்த்தி தலைமையில் வந்த குண்டர்கள் கழுத்தில் அணிந்துள்ள கட்சி துண்டுகளை கழட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.  அவர்கள் மறுக்கவே அங்கிருந்த சேர்களை கொண்டும், ஆயுதங்களை கொண்டும் அவர்களை கொலை வெறி தாக்குதல் நடத்தினர். மார்க்சிஸ்ட் கட்சி தாலுகாக் குழு உறுப்பினர் கட்சி துண்டை கழற்ற மறுத்ததால் ஓட, ஓட விரட்டி கொடூரமாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தற்போது அவர் தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜனநாயக திருவிழாவில் தேர்தல் ஆணைய விதிக்குட்பட்டு தேர்தல் பணி யாற்றிய சிபிஎம், காங்கிரஸ் கட்சி நிர்வாகி களை அமமுகவைச் சேர்ந்த பேரூராட்சி தலைவர் மீதுன் சக்கரவர்த்தி தலைமை யிலான குண்டர்கள் கொடூரமான தாக்குதல் நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.  இது குறித்து வீரமணி, திமுக செயலா ளர் செல்வராஜ் ஆகியோர் பழனி செட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். வழக்கம் போல் வழக்கு பதிவு செய்துள்ளனர். அது போதாது இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட பேரூ ராட்சி தலைவர் மீதுன் சக்கரவர்த்தி உள்ளிட்ட குண்டர்களை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.

;