சென்னை, மார்ச் 13- தேசிய குடற்புழு நீக்க வாரம் மார்ச் 14 ஆம் தேதி முதல் மார்ச் 21 ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அனைத்து அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் (ம) ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் அரசுபள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளிகலும், கல்லூரிகளிலும் தேவைக்கேற்ப குடற்புழு நீக்கமாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய அம்சங்கள்
அனைத்து குழந்தைகளுக்கும், 20 – 30 வயதுடைய பெண்களுக்கு கருவுறாத மற்றும் பாலூட்டாதவர்கள் குடற்புழு நீக்க மாத்திரை மார்ச் 14ஆம் தேதி முதல் மார்ச் 19 ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் 4 மணிவரை யிலும் வழங்கப்படும். விடுபட்ட வர்களுக்கு மார்ச் 21 ஆம்தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் சிறப்பு முகாமில் வழங்கப்படும். 1 முதல் 2 வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு 1/2 மாத்திரை (200மிகி) அல்பெண்டசோல் வழங்கப்படும். இரண்டு வயதிற்கு மேல் 19 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மற்றும் 20முதல் 30 வயதுடைய பெண்களுக்கு 1 மாத்திரை அல்பெண்டசோல் (400 மி.கி) வழங்கப்படுகிறது. அல்பெண்டசோல் மாத்திரை அனை வருக்கும் பாதுகாப்பானது. இம்மாத் திரை நன்றாக சப்பி, கடித்து மென்று சாப்பிடவேண்டும்.
பயனாளிகள்
1-19 வயதுடைய 2.39 கோடி குழந்தைகளுக்கு இந்த குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது. 20 முதல் 30 வயதுடைய 54 லட்சத்து 67 ஆயிரத்தி 69 பெண்களுக்கு (கருவு றாத மற்றும் பாலூட்டாதவர்கள்) குடற்புழு நீக்க மாத்திரை வழங்க ப்படுகிறது. 1.93 கோடி குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்குவதற்கு அரசு ரூ.2.54 கோடி நிதியை தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்திற்கு வழங்கியுள்ளது. மொத்தம் 3 கோடி குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும். சிறப்பு முகாமில் ஈடுபடும்
பணியாளர்கள்
தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாமில் சுமார் 54.439 அங்கன்வாடிபணியாளர்களும், சுகாதாரத்துறை பணியாளர்களும், சுகாதார பயிற்சியாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்களும் ஈடுபட உள்ளனர்.
குடற்புழு நீக்கத்தினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள்:
இத்திட்டதினால் குடற்புழுக்கள் முற்றிலுமாக நீக்கப்படுகிறது. இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறை பாட்டை தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறு சுறுப்பாக இருக்க உதவுகிறது. நினை வாற்றல், அறிவுத்திறன் மற்றும் உடல்வளர்ச்சியை மேம்படுத்தவும். ஆரோக்கியமாக இருக்கவும் உதவு கிறது. எனவே, அனைத்து பெற்றோர் களும், இந்த அரியவாய்ப்பினை பயன்படுத்தி, தங்கள் குழந்தை களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை பெற்று கொண்டுள்ளனரா என்பதனை உறுதிசெய்து, இம்முகாம் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். “குடற்புழு தொற்றிலிருந்து விடுபட்டு, பெண்கள் மற்றும் குழந்தை களின் ஆரோக்கியமான எதிர்கால வாழ்விற்கு அனைவரும் இணைந்து செயல்படுவோம்” இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.