tamilnadu

img

ஏபிடி சிஐடியு தொழிற்சங்கத்தின் போராட்டப் பயணம்!

ஏபிடி சிஐடியு தொழிற்சங்கத்தின் போராட்டப் பயணம் 

போராட்டத்தால் சிவந்த கோவை மண்: தொழிற்சங்க  நாட்குறிப்புத் தொடர்...

1977 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு, கடந்த 48 ஆண்டு காலமாகத் தொடர்ச்சி யாகத் தமிழகத்தில் ஒரு தொழிற்சங்கம் செயல்பட்டு வருவது சாதாரண விஷயமல்ல. அதுவும் தனியார் துறையில், நிர்வாகத்தை எதிர்த்து தொழிலாளர் உரிமைக்காகப் போராடி பல சாதனைகள் செய்திருப்பது அசாத்தியமான ஒரு நிகழ்வாகும்.  அசாத்திய சாதனைகளின் 48 ஆண்டுகள்: 1962 இல் துவங்கப்பட்ட ஆனைமலை பஸ் டிரான்ஸ்போர்ட் (ஏபிடி) பார்சல் சர்வீஸ்  நிறுவனம், தொழிலாளர்களின் உழைப்பைச்  சுரண்டிய நேரத்தில், 15 ஆண்டுகள் கழித்து வி.பி. சிந்தன் வழிகாட்டுதலில், தோழர் கே.எம்.ஹரிபட் அவர்களை தலைவராகக் கொண்டு உருவானதுதான் சிஐடியு உடன் இணைக்கப்பட்ட ஏபிடி பார்சல் சர்வீஸ் ஏ.ஆர்.சி, என்.ஐ.ஏ குரூப் கம்பெனிஸ் ஒர்க் கர்ஸ் அண்ட் ஸ்டாப் யூனியன். சங்கம் துவங்கியவுடன், அங்கீகாரத் திற்காகவும், பேச்சுவார்த்தைக்காகவும் 13 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தித் தான் தீர்வு காணப்பட்டது. சென்னை தொழி லாளர் நலத்துறையில் பதிவு செய்யப்பட்டு, இன்று வரை நிர்வாகத்துடன் மூன்று ஆண்டு களுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருகின்றன. சங்கம் துவங்கி செயல்பட்டவுடன் செய்த மிகப் பெரும் அரிய சாதனை, மாறாத பஞ்சப்படியை மாறும் பஞ்சப்படியாக மாற்றி யதுதான். இதன் மூலம் தொழிலாளர்கள் மாறி வரும் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்பப் பலன் பெற்றனர் இதேபோன்று, போனஸ்  விஷயத்தில் சங்கம் நிகழ்த்திய சாதனைகள் பிரம்மாண்டமானவை. சங்கம் துவங்கிய  காலம் முதல் இன்றுவரை சட்டப்படியான குறைந்தபட்ச போனஸ் 8.33 சதவீதத்தைத் தாண்டித்தான் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதேபோல், அதிகபட்ச சட்டப்படியான போனஸ் 20 சதவீதத்தைத் தாண்டி, சில  பத்தாண்டுகளில் போனஸ் பெறப்பட்டுள் ளது. இதன் உச்சமாக 26 சதவீதம் வரை போனஸ் பெற்றுக் கொடுத்தது சங்கத்தின் மாபெரும் சாதனையாகும். சம்பள உயர்வு, 31 நாள் விடுப்புச் சம்ப ளம், வேலை நேரத்தைக் கட்டாயப்படுத்தி யதை (10, 12 மணி நேரம்) எதிர்த்த போராட் டம், அடிப்படைச் சம்பளம், மாறும் பஞ்சப் படி, பணி நிரந்தரம், போனஸ், பணிக் கொடை, பி.எஃப், இ.எஸ்.ஐ உள்ளிட்ட உரி மைகள் யாவும் சிஐடியு தொழிற்சங்கம் போரா டித்தான் பெற்றுள்ளது. (அண்மையில் சட்ட மன்றத்தில் வேலை நேரத்தை அதிகரிப்பது குறித்த முன்மொழிவை ஆளும் அரசு கொண்டு வந்தபோது, இதனை தீரத்துடன் எதிர்த்து, அரசை பின்வாங்கச்செய்தது, சிஐ டியு மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி என்பது  நினைவு கூறத்தக்கது) அன்று முதல் இன்று  வரையில் தொழிலாளி வர்க்கத்தின் உரிமை களை ஒரு போதும் விட்டுக்கொடுக்காது சமரசமின்றி போராடும் தொழிற்சங்கமாக சிஐடியு மட்டுமே என்பது பெருமிதத்திற் குரியது. தீராப் போராட்டங்களும் தியாகங்களும் ஏபிடி சங்கம் துவங்கியதிலிருந்து நிர் வாகம் தொடர்ந்து தொழிலாளிகளின் உரி மைகளை பறிக்கும் போக்கிலேயே செயல் பட்டு வந்தது. உரிமைகளை பாதுகாக்க சங்கம் 48 ஆண்டுகளில் எண்ணற்ற போராட் டங்களை நடத்தி வருகிறது. நிர்வாகத்திற்கு இணக்கமான தொழிற்சங்கங்களை நிர்வா கமே தூண்டிவிட்டு உருவாக்கினாலும், அவை சிஐடியு-வின் போராட்டங்களுக்கு முன்னே தாக்குப் பிடிக்க முடியாமல் காணா மல் போய்விட்டன. போராடுகிற போதெல்லாம் நிர்வாகம் பழிவாங்கும் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டது. குடும்பத்துடன் வசிக்கும் தொழிலாளியை சங்கத்தின் உறுப்பினர் என்பதற்காக மாநிலம் விட்டு மாநிலமும், மாவட்டம் விட்டு வேறு மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்தது இன்றும் தொடர்கிறது. தற்காலிகப் பணிநீக்கம், பதவி உயர்வு மறுப்பு, பதவி இறக்கம், அபராதம் போன்ற  பழிவாங்கல்களும் தொடர்ந்தன. குறிப்பாக,  சங்கத்திற்கு தலைமை தாங்கிய தோழர் களான அப்துல் காதர், எஸ். ஆறுமுகம், சி. பிரபாகரன், சி. மாதேஸ் போன்ற பல தலை வர்கள் பழி வாங்கப்பட்டுள்ளனர்.  சரக்கு போக்குவரத்தின்போது ஏற்படும்  சேதங்களுக்கு, விபத்துகளுக்கு, காணாமல் போன சரக்குகளுக்கு தொழிலாளிதான் பொறுப்பு என அபராதம் விதிக்கப்பட்டதற் கும் சங்கம் எதிர்த்து போராடியது. பல வழக்குகளை தொழிலாளர் நீதிமன்றங்க ளில் தொடுத்துச் சங்கம் வெற்றியை ஈட்டி யுள்ளது. நம்பிக்கையின் அங்கீகாரம் இதுகுறித்து சங்கத்தின் தலைவர் எம். அருணாச்சலம் கூறுகையில், சங்கத்தின் பல  கட்டப் போராட்ட நடவடிக்கைகளால், தொழி லாளர்களின் அசைக்க முடியாத நம்பிக் கையை சிஐடியு பெற்றது. அதன் விளைவாக, 1983 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஏபிடி நிர்வாகத்தில் வருங்கால வைப்பு நிதி அறங்காவலர் குழுவிற்கான தேர்தலில் தேர்வு செய்யப்பட வேண்டிய இரண்டு இயக்குநர்களும், பணியாளர் நல நிதிக் குழுவில் பெரும்பகுதி இயக்குனர்களும், கூட்டுறவு சங்கத் தேர்தலிலும் சிஐடியு தோழர்களே தொடர்ந்து வெற்றி பெற்று தலைமை தாங்கி வருகின்றனர். சிஐடியு சங்கம் இதுவரை 15 ஒப்பந்தங் களைப் போட்டுள்ளது. சரக்குப் போக்குவ ரத்து சுமைப்பணி தொழிலாளர்கள் 387  பேருக்கு பணி நிரந்தரம் செய்வதில், சிஐடியு தலைவர்களான எம்.ஏ. பாபு, வேணுகோ பால், ஆறுமுகம் உள்ளிட்டோரின் சட்டப் போராட்டமும், வேலை நிறுத்தப் போராட்ட மும் மிக முக்கியமானவை. சங்கத்தை துவக் கிய தலைவர்கள் தோழர்கள் எஸ்.ஆறு முகம், ஜெகநாதன், அமீது அலி, டக்லஸ் பெர்ணாட்டோ, ஜேம்ஸ் சூசைராஜ், கே.பாலு, வி.தங்கவேலு, வெங்கட்ராமன், ராமகிருஷ் ணன் ஆகியோர் என்றென்றும் நினைவு கூறப் படும் தலைவர்கள் ஆவர். சென்னை தொழி லாளர் நலத்துறையில் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டு இன்றுவரை நிர்வாகத்துடன் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கைகளை முன் வைத்து உரிமைகளை பெற்று ஒப்பந்தங் கள் போடப்பட்டு வருகிறது. இன்றைய சூழலில் சிஐடியுவின் பணி ஏபிடி நிர்வாகம் இப்போது மூன்றாவது தலைமுறையினரின் கீழ் இயங்குகிறது. நிரந்தரப் பணியாளர்களை அமர்த்தாமல், அவுட்சோர்சிங், கான்ட்ராக்ட் முறையில் வாகனங்களைப் பயன்படுத்துதல், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தினக்கூலி முறையில் பணியமர்த்தல் எனப் பழைய சுரண்டல் உத்திகள் புதிய வடிவம் பெற்றுள் ளன. 1993ல் கோவை சூலூர் பிரிவில் ஏபிடி தலைமையகம் முன்பு சொந்தமாக இடம் வாங்கி அலுவலகம் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து பல முன்னணி ஊழியர்களையும் தலைவர்களையும் தமிழகம் முழுவதும் உருவாக்கிய மகத்தான பெருமை மிகுந்த தொழிற்சங்கம்தான் சிஐடியு. அதேநேரத்தில், சங்கத்தை தோற்று வித்த தலைவர்களின் வழியில், அடுத்தடுத்து இச்சங்கத்தை தலைமையேற்று நடத்தும்  அடுத்த தலைமைமுறையான எங்களைப் போன்றவர்கள், இந்தச் சவால்களை சங்கம் தொழிலாளர் நலத்துறை அலுவலர் முன்  தொழில் தாவா பிரச்சனைகளை கொண்டு சென்றும், நீதிமன்றத்திலும் தீர்வு கண்டும் முன்னேறி வருகிறோம்.  ஒப்பந்தம், வெளிமுகமை, தினக்கூலி  எனப் பல பெயர்களில் பணியமர்த்தப்பட்டா லும், அவர்களின் சீருடை, பேட்டா, வேலை நேரம், சம்பளம், போனஸ், மருத்துவக் காப் பீடு, விடுமுறை நாட்கள் போன்ற பல்வேறு உரிமைகளை நிலைநாட்டச் சிஐடியு தொழிற் சங்கம் இன்றும் நிர்வாகத்துடன் தொடர்ந்து  போராடி வெற்றி பெறும் சங்கமாக செயல் பட்டு வருகிறது என்பது பெருமைக்குரிய விஷயம். இத்தகைய பெருமை வாய்ந்த சிஐ டியு ஏபிடி சங்கம் கோவையில் நடைபெறும் 16  ஆவது சிஐடியு மாநில மாநாடு பெற்றி பெற வும், நவம்பர் 9 கோவை பேரணியை வெற்றி கரமாக்கிடவும், தீவிர களப்பணியை மேற் கொண்டு வருகிறேம், என்றார். தமிழகம் முழுவதும் பல முன்னணி ஊழி யர்களையும் தலைவர்களையும் உருவாக் கிய மகத்தான பெருமை மிகுந்த தொழிற் சங்கம்தான் சிஐடியு. வர்க்கத்தை திரட்டுவோம்! ஒன்றுபடு வோம்! போராடுவோம்! வெற்றி பெறுவோம்!  சோசலிசமே மாற்று! என்ற முழக்கத்தோடு தொழிலாளிகளை திரட்டும் பணியில் சிஐடியு தனது வலிமை மிகுந்த பயணத்தை தொடர்கிறது. சிஐடியு மாவட்டப் பொருளாளர், கோவை