கேசவன்பாளையம் தலித் மக்களுக்கு பட்டா வழங்க ஒப்புதல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையில், தரங்கம்பாடி அருகே கேசவன் பாளையம் பகுதி தலித் மக்கள், குடிமனை - பட்டா கேட்டு 7 நாட்களாக நடத்தி வந்த காத்திருப்பு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. குடிமனைக்கான இடத்தை, வகை மாற்றம் செய்து பட்டா வழங்குவதாக அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்துள்ளனர். இதையடுத்து காத்திருப்புப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
