தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி
கிடையாது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி
சென்னை, அக். 16 - தமிழ்நாட்டில் எந்த வகையிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அரசு அனுமதி அளிக்காது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்தின் மூன்றாம் நாளில், கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த உள்ளதைத் தடுக்க வேண்டும் என பிரின்ஸ் எம்எல்ஏ வலியுறுத்தினார். இந்தக் கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, நீர், நிலம் என எந்த இடத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கமாட்டோம் என உறுதியளித்தார். தமிழ்நாட்டில் இராமநாதபுரம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி என எந்த இடத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒருபோதும் அனுமதி இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.