tamilnadu

img

ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு பாராட்டு

ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு பாராட்டு

கும்பகோணம், ஆக. 6-  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்ட அனைத்து அரசு துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, கும்பகோணத்தில் இந்த வருடம் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.  நிகழ்ச்சிக்கு கும்பகோணம் வட்ட தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கிருஷ்ணகுமார் வரவேற்புரையாற்றினார். வட்டச் செயலாளர் பக்கிரிசாமி நிகழ்ச்சியை துவக்கி வைத்து வாழ்த்தினார்.  மாநில செயற்குழு உறுப்பினர் சோ. சண்முகம், எம்.சோமு, அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் வெங்கடேசன், மருந்தாளுநர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் விஸ்வேஸ்வரன், சங்க பொருளாளர் ராமமூர்த்தி, இணைச் செயலாளர் சேகர், மல்லிகா, வட்ட துணைத் தலைவர் தங்க வளவப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சங்க தஞ்சை மாவட்டச் செயலாளர் ஆர். பன்னீர் செல்வம் நிறைவுரையாற்றினார். நிகழ்ச்சியில், இந்த வருடம் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் வி.மோகன், வி.சிவசங்கர் மற்றும் ஓய்வூதியர் சங்கத்தின் உறுப்பினர்களான 75 வயதை கடந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர். வட்ட துணைச் செயலாளர் கண்ணாமணி நன்றி தெரிவித்தார்.