tamilnadu

img

அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி அணிக்கு பாராட்டு விழா

அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி  ரோட்டரி அணிக்கு பாராட்டு விழா

அறந்தாங்கி, ஜூலை 7-  அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி அணிக்கு தலைமை ஏற்று, சிறந்த அணி, சிறந்த தலைவர் உட்பட ஏழு விருதுகள் வென்ற, முன்னாள் தலைவர் அப்துல் பாரி தலைமையிலான அணிக்கும், துணை ஆளுநர் டாக்டர் விஜய் சிவானந்தத்திற்கும் பாராட்டு விழா, கேம்பிரிட்ஜ் கேட்டரிங் கல்லூரியில் நடைபெற்றது.  சங்கத்தின் பட்டய தலைவர் டாக்டர் தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். முன்னாள் தலைவர் கான் அப்துல் கபார்கான் முன்னிலை வகித்தார்.  தலைவர் நஸ்ருதீன் வரவேற்றுப் பேசினார்.  அறந்தாங்கி ஐ.எம்.ஏ.யின் முன்னாள் தலைவர் டாக்டர். லட்சுமி நாராயணன் சிறப்பு விருந்தினராகவும், தமிழ் செம்மல் கவிஞர் ஜீவி சிறப்பு பேச்சாளராகவும், கலந்து கொண்டனர். மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் குமார், முன்னாள் தலைவர் சீனிவாசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விழாவில் ஆசிரியர் யாஸ்மின் ராணி, அனுராதா விஜய், அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சென்ற ஆண்டு செயலாளர் ஆண்டோ பிரவீன் மற்றும் பொருளாளர் முபாரக் அலிக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. செயலாளர் விஜயகுமார் நன்றியுரை வழங்கினார்.