tamilnadu

img

மைக்கேல்பட்டி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு பொய்களைப் பரப்பிய அண்ணாமலை பாஜக - மன்னிப்பு கேட்க வேண்டும்!

மைக்கேல்பட்டி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு பொய்களைப் பரப்பிய அண்ணாமலை பாஜக - மன்னிப்பு கேட்க வேண்டும்!

பெ. சண்முகம் பேட்டி  நாமக்கல், பிப். 18 - மைக்கேல்பட்டி பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை விவ காரத்தில் தமிழகம் முழுவதும் மதப்  பதற்றத்தை உருவாக்கிய அப்போ தைய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலி யுறுத்தியுள்ளார். நாமக்கல்லில் பிப்ரவரி 17, 18 தேதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக்  கூட்டம் நடைபெற்றது. மாநிலச் செயற்குழு உறுப்பினர்  ஜி. சுகு மாறன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி, மத்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலை வர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தி யக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், கே. பாலபாரதி உள்ளிட்ட தலை வர்கள் கலந்து கொண்டனர்.  தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் வர விருக்கும் 2026 சட்டமன்றத் தேர்த லை எதிர்கொள்வது குறித்து விரி வான விவாதங்கள் மேற்கொள்ளப் பட்டன. கூட்டத்தின் முடிவில் பெ. சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரி வித்ததாவது: தற்கொலை வழக்கும் அண்ணாமலையும் கடந்த 2022-ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல் பட்டி மாணவி லாவண்யா தற் கொலை செய்துகொண்ட நிகழ்வை, மதமாற்றக் கொடுமை யால் நிகழ்ந்ததாகச் சித்தரித்து அன்றைய பாஜக தலைவர் அண்ணா மலை பெரும் பதற்றத்தை உரு வாக்கினார். இல்லாத ஒரு பிரச்ச னையை எழுப்பி மக்களிடையே மதப் பகைமையை உருவாக்கி யதற்கு அவரே அடிப்படைக் காரண மாக இருந்தார்.  ஆனால், தற்போது இவ்வழக் கை விசாரித்த மத்திய புலனாய்வுக் கழகம், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் அந்த மாணவி மதமாற்றம் செய்யப்படவில்லை என்பதையும், அந்தப் பள்ளியில் பயின்று வெளி யேறிய எந்த மாணவியும் மத மாற்றம் செய்யப்படவில்லைஎன்பதையும் தெளிவு படுத்தியுள்ளது. எனவே, அரசியல் லாபத் திற்காகப் பொய்ப் பிரசாரம்  செய்து கலவரச் சூழலை  ஏற்படுத்திய அண்ணா மலை தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.  மேலும், இத்தகைய பதற் றத்தை உருவாக்கியதற்காக அவர் மீது தமிழ்நாடு அரசு, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சிபிஐ (CBI) அமைப்பு ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தும் உண்மையைச் சொல்லியிருக்கிறது என் றால், அண்ணாமலையின் குற்றச்சாட்டு எவ்வளவு பெரிய பொய் என்பது நிரூ பணமாகியுள்ளது. மாற்றுத் திறனாளிகள் போராட்டம் சென்னையில் இரண்டு நாட்களாக போராடி வரும் மாற்றுத் திறனாளிகளை நள்ளிரவில் கைது செய்து,  மண்டபத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பேருந்து களில் ஏற்றிச் சென்னை முழுவதும் பல மணி நேரம் அலைக்கழித்த காவல்துறை நடவடிக்கை வன்மையான கண்டனத்திற்கு உரியது. இது ஒரு மிகப்பெரிய மனித உரிமை மீறல். இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆந்திர மாநிலத்தைப் போலத் தமிழ் நாட்டிலும் மாதாந்திர பரா மரிப்பு உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என்பதே  அவர்களின் நியாயமான கோ ரிக்கை. சுமார் 7.5 லட்சம்  மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் 500 அல்லது 1000 ரூபாய் உயர்த்துவது அரசுக்குப் பெரிய நிதிச்  சுமையாக இருக்காது. மகளிர்  உரிமைத் தொகை வழங்கு வதை வரவேற்கும் அதே  வேளையில், மாற்றுத் திற னாளிகளின் வாழ்வாதாரக் கோரிக்கையையும் முதல மைச்சர் உடனடியாகப் பரி சீலித்து இந்தப் போராட் டத்தைச் சுமூகமாக முடிக்க வேண்டும். இவ்வாறு பெ. சண்முகம் கூறினார். மேலும் செய்தியா ளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த பெ. சண்முகம், “கௌரவ விரிவுரையாளர்களுக்கு நீதி மன்றத் தீர்ப்பின் அடிப்ப டையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மடிக் கணினி வழங்கும் திட்டத் தில் நிலவும் தாமதத்தைத் தவிர்த்து, கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே அனைத்து  மாணவர்களுக்கும் மடிக் கணினி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.  உள்ளாட்சித் தேர்தலை உரிய காலத்தில் நடத்தாமல் தள்ளிப்போடுவது ஜனநாய கத்திற்கு எதிரானது. சட்டமன்றத் தேர்தல் முடிந்த கையோடு எவ்விதக் காரண மும் சொல்லாமல் உள்ளாட்சித்  தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். பேட்டியின் போது கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர்  பி. டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் எஸ். கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் என். வேலுச்சாமி ஆகியோர்  உடனிருந்தனர். (ந.நி)