tamilnadu

img

ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் வாக்கை யாரோ போட்டு விட்டனர்

சென்னை,பிப்.19- தமிழ்நாட்டில் 21 மாநக ராட்சிகளுக்கும், 138 நகராட்சி களுக்கும், 489 பேரூராட்சி களுக்கும் என 648 நகரப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக் குப்பதிவு தொடங்கியது முதல் மக்கள் நீண்ட வரிசை யில் நின்று தங்கள் வாக்கு களை பதிவு செய்தனர்.  இந்த நிலையில், சென்னை, அண்ணாநகர் வாக்குச்சாவ டியில் ஒன்றிய அமைச்சர் எல். முருகனின் ஓட்டை வேறு ஒரு வர் செலுத்தியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை தனது டுவிட்டரில் பதி விட்டுள்ளார். அண்ணாமலை தனது டுவிட்டரில் வெளியிட்ட  பதிவில் , “ மத்திய அமைச்சர் எல்.முருகனின் வாக்கு சென்னை அண்ணாநகர் கிழக்கில் உள்ள வாக்குச் சாவடியில் வேறு ஒரு நப ரால் கள்ள வாக்காக போடப் பட்டுவிட்டது. மாநில தேர்தல் ஆணையர் இப்போதாவது நட வடிக்கை எடுப்பாரா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால், பின்னர் அண்ணா நகர் கிழக்கு பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் பாஜக எம்.பி. எல்.முருகன் வாக்க ளித்தார். 5 மணிக்கு மேல் வந்த நிலையில் அவருக் கான டோக்கனை பெற்று 5.10 மணிக்கு வாக்கை பதிவு செய்தார். ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தனது வாக் கினை பதிவு செய்த உடன் அங்கிருந்த அனைவரையும் வெளியேற்றி, கொரோனா நோயாளிகள் வாக்களிப்ப தற்கான ஏற்பாடுகள் நடை பெற்றது.