சென்னை,மார்ச் 29- துபாய் மற்றும் அபுதாபி பயணத்தில் 14,700 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் 6 மிகப்பெரிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் அரசு முறை பயணமாக கடந்த 24 ஆம் தேதி தனி விமானம் மூலம் துபாய் சென்றார். அவருடன் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட தமிழக அரசின் உயர் அதிகாரிகளும் சென்றி ருந்தனர். துபாயில் பொருளாதார அமைச்ச கத்துக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அங்குள்ள பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின்டூக் அல்மாரி, வெளிநாட்டு வர்த்தக துறை அமைச்சர் டாக்டர் தானிபின் அகமது ஆகியோரையும், உயர் அதிகாரிகளையும் சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்கள் சந்திப்பில் தமிழகத்தில் துபாய் நிறுவனங்கள் தொழில் தொடங்க பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெ ழுத்திட்டார். அதன்பிறகு அங்கு நடை பெற்ற சர்வதேச கண்காட்சிக்கு சென்று தமிழக அரங்குகளை திறந்து வைத்தார்.
அதன்பிறகு துபாய், அபுதாபி பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் செவ்வாயன்று (மார்ச் 29) அதிகாலை 2.30 மணிக்கு சென்னை திரும்பினார். அவரை விமான நிலையத்தில் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் வரவேற்ற னர். பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் கூறியதாவது:- துபாய் பயணத்தின் போது ஆறு மிக முக்கியமான தொழில் நிறுவனங்க ளுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளது. அதன்படி, இரும்பு தளவாடங்கள் துறை யான நோபல் ஸ்டீல்ஸ் துறையோடு ரூ. 1,100 கோடி, ஜவுளித் துறையைச் சார்ந்த நிறுவனத்துடன் ரூ. 500 கோடி, உணவுத் துறை குழுமத்தோடு ரூ. 100 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி யுள்ளது.
மருத்துவத் துறை மற்றும் சரக்கு போக்குவரத்து நிறுவனத்துடன் ரூ. தலா 500 கோடிக்கும், உணவு பதப்படுத்தும் தொழில் மற்றும் கட்டுமானத்துறை நிறுவனத்தோடு ரூ. 3,500 கோடிக்கும் ஒட்டுமொத்தமாக இந்த ஆறு நிறுவனங்களுடன் 6,100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தங் கள் போடப்பட்டிருப்பதன் மூலமாக 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகப்போகிறது. ஆகவே, இந்தப் பயணம் ஒரு மகத்தான பயணமாக, வெற்றிப் பயணமாக அமைந்திருக்கிறது. துபாய், அபுதாபி உள்ளிட்ட அமீரகத்தின் பெரும் நிதி மேலாண்மை நிறுவனங்கள் தமிழ கத்தில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திட்டங்கள், சிறு துறைமுகங்கள் மேம்பாடு, உணவு பதப்படுத்துதல், தொழில் பூங்காக்கள் உருவாக்கக்கூடிய திட்டங்க ளில் முதலீடு செய்ய முன்வந்திருக்கின்றன. தொடர்ந்து, அடுத்தடுத்த மாதங்களில் இன்னும் பல ஒப்பந்தங்கள் கையெ ழுத்தாக இருக்கின்றன.
காகிதக் கப்பல்கள்
கடந்த அதிமுக ஆட்சியில் புரிந்து ணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் காகிதக் கப்பல்களாகத் தான் இருந்தது. ஒப்பந்தம் போட்டதோடு சரி. ஆனால் நாங்கள் ஒப்பந்தம் போட்டிருக் கிறோம். விரைந்து தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.