tamilnadu

img

அங்கன்வாடி ஊழியர்களின் மாநில மாநாடு தூத்துக்குடியில் எழுச்சியுடன் தொடங்கியது

அங்கன்வாடி ஊழியர்களின் மாநில மாநாடு தூத்துக்குடியில் எழுச்சியுடன் தொடங்கியது

தூத்துக்குடி, அக்.11- தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியா ளர் சங்கத்தின் மாநில 7- ஆவது மாநாடு தூத்துக்குடி யில் சனிக்கிழமை (அக். 11)  அன்று எழுச்சியுடன் தொடங்  கியது. தூத்துக்குடி இரண்டாம் கேட் அருகே உள்ள தோழர்  நீலிமா ஓய்த்ரா  நினைவ ரங்கத்தில் (மாநகராட்சி மாநாட்டு மையம்) பிரதி நிதிகள் மாநாட்டின் துவக்க மாக தமிழ்நாடு அங்கன்வாடி  ஊழியர் மற்றும் உதவியா ளர் சங்கத்தின் கொடியினை சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டெய்சியும், சிஐ டியு கொடியினை அங்கன் வாடி ஊழியர் சங்கத்தின்  அகில இந்திய பொதுச் செய லாளர் ஏ.ஆர். சிந்துவும் ஏற்றி  வைத்தனர். பிரதிநிதிகள் மாநாட் டிற்கு மாநிலத் தலைவர் ரத்தி னமாலா தலைமை வகித் தார். மாநில நிர்வாகி நாக லட்சுமி அஞ்சலி தீர்மானம் வசித்தார். வரவேற்புக் குழுத் தலைவர் பேச்சி முத்து வரவேற்றார். சிஐடியு  மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன்  மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசினார். மாநிலப் பொதுச்செயலாளர் டெய்சி வேலை அறிக்கையும், மாநி லப் பொருளாளர் தேவமணி  வரவு - செலவு அறிக்கையை யும் தாக்கல் செய்தனர். தொடர்ந்து மாநாட்டை வாழ்த்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மைக்கேல் லில்லி புஷ்பம், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு மாநில கன்வீனர் தன லட்சுமி,  தமிழ்நாடு சத்து ணவு ஊழியர் சங்க மாநி லத் தலைவர் செல்லதுரை, சிஐடியு மாநிலச் செயலாளர்  ரசல், ஓய்வுபெற்ற அங்கன்  வாடி ஊழியர் சங்கம் மாநி லத் தலைவர் பாக்கியம் ஆகி யோர் மாநாட்டை வாழ்த்திப்  பேசினர்.  “ஆட்சிக்கு வந்தால் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர் ஆக்கு வோம்” என்ற திமுக தேர்தல்  அறிக்கையின் 311-ஆவது வாக்குறுதியை அரசு உட னடியாக நிறைவேற்ற வேண்டும்; அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழி யர்களாக்க வேண்டும்; ஓய்வூதியம் - குடும்ப ஓய் வூதியம் வழங்க வேண்டும், பணி நிறைவடையும் போது அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்க்கு முறையே ரூபாய் பத்து லட்சம் மற்றும் ஐந்து லட்சம்  பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. அங்கன்வாடி ஊழியர் களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் ‘நவம்பர் 14’ குழந்தைகள் தினத்தன்று போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. ஏ.ஆர். சிந்து சிறப்புரையாற்றினார்.