அன்புமணி நீக்கம்
திண்டிவனம், செப். 11 - பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்குவதாக, அவரது தந்தையும் பாமக நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் செய்தி யாளர்களைச் சந்தித்த ராமதாஸ், “கட்சியின் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கப்படுகிறார். பல கட்ட விசாரணைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப் பட்டிருக்கிறது. அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டு களுக்குப் பதிலளிக்க 2 முறை அவகாசம் வழங்கி யும் அதற்குப் பதில் அளிக்கா ததால் அனைத்து குற்றச் சாட்டுகளையும் அவர் ஏற்றுக் கொண்டதாக கரு தப்படும்” என்று தெரிவித்துள் ளார். “பாமக தலைமைக்கு கட்டுப் படாத, தான் தோன்றித்தனமாக, அரசி யல்வாதி என்பவருக்குத் தகுதியற்றவராக செயல் பட்டு வருகிறார் அன்புமணி. பாமகவைச் சேர்ந்த யாரும் அன்புமணியுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. மீறி னால் நடவடிக்கை எடுக்கப் படும்” என்றும் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையே, அன்பு மணி ஆதரவாளரான வழக்கறிஞர் பாலு, பதவி நீக்கம் செய்வது, கூட்டங் கள் நடத்துவது உள்ளிட்ட எந்த முடிவுகளை மேற்கொள்ளவும் தலை வருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், ராம தாசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்றும், எனவே அவரது அறிவிப்பு செல்லாது என்றும் தெரிவித்துள்ளார்.