அன்பு மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ஜி. ராஜேஸ்வரன் காலமானார்!
திண்டுக்கல், பிப். 17 - திண்டுக்கல் அன்பு மருத்துவமனை நிறுவன ரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பின ருமான டாக்டர் ஜி. ராஜேஸ்வ ரன் (76) உடல்நலக் குறை வால் காலமானார். டாக்டர் ஜி. ராஜேஸ்வ ரன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மறைந்த தலைவர்கள் ஆர். உமா நாத், பாப்பா உமாநாத் ஆகி யோரின் மருமகன் மற்றும் டாக்டர் லட்சுமி நேத்ராவதி யின் கணவர் ஆவார். தேனி மாவட்டம் அமச்சி யாபுரத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜேஸ்வரன், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி யில் படிக்கும் போதே, இந்திய மாணவர் சங்கத்தில் செயற்பாட்டாளராக இருந்து மாணவர் போராட்டங்களில் பங்கேற்றார். பின்னர், திண்டுக் கல்லில் ரோஜா விலாஸ் எதிரே சிறிய கட்டடத்தில் மருத்துவ சேவையைத் தொடங்கிய அவர், ஏழை, எளிய மக்களிடம் வெறும் ஒரு ரூபாய் மட்டுமே பெற்று சிகிச்சை அளித்தார். தனது மனைவி டாக்டர் லட்சுமி நேத்ராவதியுடன் இணைந்து, அன்பு மருத்துவ மனையைத் தொடங்கியும் பொதுமக்களுக்கு சேவை யாற்றினார். எளிய மக்களின் மருத்து வராக போற்றப்பட்ட டாக்டர் ராஜேஸ்வரன், மது ரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், செவ்வாய்க்கிழமையன்று உயிரிழந்தார். அவரது உடல் திண்டுக்கல் பாண்டியன் நக ரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக் காக வைக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தி னர். புதன்கிழமை பிற்பகல் 12 மணிக்கு இறுதி ஊர்வல மும், அதன்நிறைவில் திண்டுக்கல் ஆர்.எம். காலனி யில் உள்ள மின் மயானத் தில் உடல் தகனம் தகனம் செய்யப்படுகிறது. டாக்டர் ராஜேஸ்வரன் - நேத்ராவதி தம்பதியருக்கு டாக்டர் வினோத், டாக்டர் அமுதநிலவன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
