tamilnadu

போற்றுதலுக்குரிய போராளி தோழர் வி.எஸ். அச்சுதானந்தன்!

போற்றுதலுக்குரிய போராளி  தோழர் வி.எஸ். அச்சுதானந்தன்!

பெ. சண்முகம் புகழஞ்சலி

“மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலை வர்களில் ஒருவரான தோழர் வி.எஸ். அச்சுதானந்த னின் மறைவு, ஒரு சகாப்தத்தின் முடிவு” என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் குறிப்பிட்டார். கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் வி.எஸ். அச்சுதானந்தன் படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பெ. சண்முகம் இரங்கல் உரையாற்றினார். அப்போது, “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-ஆவது மாநாடு கண்ணூரில் நடைபெற்ற போது, தொடக்க காலத் தலை வர்களில் நம்மோடு இருக்கும் இருவர் என்று என். சங்கரய்யா, வி.எஸ். அச்சுதானந்தன் ஆகிய இருவரையும் குறிப்பிட்டு நெகிழ்ந் தோம். நவம்பர் 2023-இல் தோழர் சங்கரய்யாவை இழந் தோம், இன்று அச்சுதானந்தன் மறைந்து விட்டார். மறைந்த நம் அன்புத் தலைவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம் “ என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய பெ. சண்முகம், “அச்சுதானந்தன் மிக எளிய குடும்பத்தில் பிறந்து வறுமையில் வாடியவர். பொது வுடைமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு நெடிய போராட்டங்களில் ஈடுபடும் போது, வறுமை தன்னை வாட்டிய போதும் இயக்கப் பணிகளில் சளைக்காது தொடர்ந்தவர். பொது வாக வாழ்க்கைப் போராட்டங்களின் நெருக்கடிக்கு இடையே கம்யூனிஸ்ட் இயக்கப் பணிகளில் தொடர இயலாமல் விடுவித்துக் கொண்டவர்கள் உண்டு. ஆனால், உறுதிமிக்க முறையில் தன்னை மேலும் அர்ப்பணிப்போடு ஈடுபடுத்திக் கொண்டவராக விளங்கியவர் அச்சுதானந்தன். கேரள மாநிலத்தில் கட்சியை வளர்த்தெடுத்து வலுவாகக் கட்டி யெழுப்பியதில் அவரது பங்களிப்பு மகத்தானது. அவரது இழப்பு துயரம் அளிப்பது. ஆலப்புழையில் புதன்கிழமையன்று இறுதி நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவித்து உள்ளனர். ஆலப்புழையில் மார்க்சிய இயக்கத்தின் தியாகிகள் மறைவுக்குப் பின் புதைக் கப்பட்ட சதுக்கத்திலேயே தனது உடலும் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார். அங்கே நம் அன்புத் தலைவருக்கு கேரள மக்கள் கண்ணீர் அஞ்சலியோடு விடை கொடுப்பார்கள்” என்று குறிப்பிட்டார்.