tamilnadu

அமெரிக்கா பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ளும்

அமெரிக்கா பொருளாதார மந்த நிலையை எதிர்கொள்ளும்

பொருளாதார அறிஞர்கள் எச்சரிக்கை

வாஷிங்டன்,மே 20- அதிகரித்து வரும் அமெரிக்க அர சின் கடன், தேக்கமடைந்த வளர்ச்சி, நுகர்வோரிடம் அதிகரித்து வரும் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையின்மை ஆகியவற்றின் காரணமாக அமெரிக்கா பொருளா தார மந்தநிலையை எதிர்கொள்ளும் அபாயம் உருவாகியுள்ளது என  அமெரிக்கப் பொருளாதார அறி ஞர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  உறுதிப்படுத்தும் ஜே.பி. மோர்கன் நிறுவனம்   ஜே.பி. மோர்கன் நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார நிபுணரான மைக்கேல் ஃபெரோலி, “பொருளாதார மந்தநிலை தற்போது 50 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. எனினும் இந்த மந்த நிலை இன்னும் அதிகரிக்கும் என நாங்கள் நம்புகிறோம்” என்று தெரி வித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்கா விதித்த வரிகள்  காரண மாக மந்தநிலை உருவாக 60 சதவீத வாய்ப்பு இருப்பதாக மதிப்பிட்டி ருந்தது. ஜே.பி. மோர்கன் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான ஜேமி டிமோன் பேசிய போது, மந்தநிலை அபாயம் இருப்பதை இன்னும் பார்க்க முடிகிறது. எனினும் எங்களால்  அதைத் தவிர்க்க முடியும் என நம்புகிறோம். என்றாலும் மந்த நிலை அபாயம் இருப்பதை நான் மறுக்க மாட்டேன். மந்தநிலை ஏற்பட்டால் அது எவ்வளவு மோச மாக இருக்கும் அல்லது எவ்வளவு காலம் வரை நீடிக்கும் என்று எனக்குத் தெரியவில்லை என்று அவர் கடந்த வாரம் பொருளாதார பத்திரிகை ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார். முதலீட்டு கோடீஸ்வரரான ஸ்டீவ் கோஹன் “இன்னும் மந்தநிலை உருவாகவில்லை, ஆனால் வளர்ச்சி மிகவும் குறைந்து வருகிறது” என தெரிவித்ததுடன் மந்த நிலைக்கு சுமார் 45 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மூடிஸ் நிறுவனத்தின் கணிப்பு  இதற்கிடையில் மூடிஸ் நிறு வனமும் அமெரிக்க அரசின் கடன் மதிப்பீட்டைக் குறைத்துள்ளதுடன், அமெரிக்கத் தலைவர்கள் அதிகரித்துள்ள பட்ஜெட் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகக் கூறியுள்ளது. 2024 இல் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.4  சதவீத பற்றாக்குறையாக இருந்தது. இது 2035 இல் கிட்டத்தட்ட 9 சதவீத மாக உயரும் என்று மூடிஸ் நிறு வனம் கணித்துள்ளது.   குறையும் பொருளாதார வளர்ச்சி   அமெரிக்கப் பொருளாதாரம் மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்த தை விட இப்போது பலவீனமாக இருப்பதாக பென்சில்வேனிய மாகா ணத்தில் உள்ள பெடரல் ரிசர்வ் வங்கி கிளை தெரிவித்துள்ளது.  நிச்சயமற்ற வர்த்தகக் கொள்கை கள் காரணமாக 2025 இன் முதல் காலாண்டில் அமெரிக்கப் பொருளா தாரம் 0.3 சதவீதம்  சுருங்கியுள்ளது. இந்நிலையில் சில பொருளாதார நிபு ணர்கள் இந்தாண்டு அமெரிக்கா வின் பொருளாதார வளர்ச்சி வெறும் 1.4 சதவீதம் வரை மட்டுமே இருக்கும் என தெரிவித்துள்ளனர். டிரம்ப் வர்த்த கப் போரை துவங்குவதற்கு முன் 2.4 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. நுகர்வோர் நம்பிக்கை வீழ்ச்சி மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வுப்படி அமெரிக்க நுகர்வோ ருக்கு அந்நாட்டின் பொருளாதா ரத்தின் மீதான நம்பிக்கை மே மாதம் உட்பட தொடர்ந்து ஐந்தாவது மாத மாக குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்த அளவாகும். மேலும் இந்த ஆய்வில் மந்த நிலை தீவிரமாகும் என மக்கள் கருதுவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.