tamilnadu

img

இந்தியாவின் விருந்தினராக வந்திருந்த ஈரான் கப்பலைத் தாக்கி அழித்த அமெரிக்கா!

இந்தியாவின் விருந்தினராக வந்திருந்த ஈரான் கப்பலைத் தாக்கி அழித்த அமெரிக்கா!

டெஹ்ரான், மார்ச் 5 - இந்தியாவின் அழைப்பை ஏற்று வந்திருந்த ஈரான் போர்க் கப்பலை, இந்தியப் பெருங்கடலுக்கே வந்து, அமெரிக்கா தாக்கி அழித்திருக்கும் நிலையில், அதுபற்றி கண்டனம் கூட தெரிவிக்காமல், பிரதமர் நரேந்திர மோடி இந்திய நாட்டிற்கு சர்வதேச அளவில் களங்கத்தை ஏற்படுத்தியுள் ளார். பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய பாஜக அரசின் இந்த செயலுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. மோடி அரசு கோழைத்தனமானது; அது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பைக் கண்டு அஞ்சுகிறது என்று பாது காப்புத் துறை சார்ந்த ஆய்வாளர் கள் கடுமையாக சாடியுள்ளனர். முக்கியத்துவம் வாய்ந்த பன்னாட்டு கடற்படை பயிற்சி இந்திய கடற்படையின் மிக  முக்கியத்துவம் வாய்ந்த பன்னாட்டு கடற்படைப் பயிற்சியாக ‘மிலான் 2026’ (MILAN 2026) உள்ளது.

இந்த பயிற்சி முதன் முதலாக 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் 13-ஆவது பயிற்சி, பிப்ரவரி 19 முதல் 25 வரை, விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த பன்னாட்டு கடற்படைப் பயிற்சி மற்றும் சர்வ தேச கடற்படைக் கண்காட்சியில், இந்தியாவின் அழைப்பின் பேரில் ஈரான் நாட்டின் ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா (IRIS Dena) என்ற போர்க்கப்பலும் பங்கேற்றது.  இந்திய பெருங்கடல் பகுதியில் தாக்குதல் நடத்திய அமெரிக்கா ஈரான் மட்டுமன்றி, அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 18 போர்க்கப்பல்கள் பங்கேற்றன. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்- தான் இந்த பயிற்சியைத் துவக்கி வைத்தார்.

இந்நிலையில், இந்தியாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு, வழக்கமான மேற்கு நோக்கிய பாதையில் ஈரான் கப்பல் தாயகம் திரும்பிக் கொண்டி ருந்தது. அப்போது மார்ச் 4 அன்று அதிகாலை இலங்கையின் ‘காலே’ (Galle) பகுதிக்கு தெற்கே சுமார் 40 கடல் மைல் தொலைவில் ஈரான் கப்பல் சென்று கொண்டிருந்த போது, அதனை அமெரிக்கா தாக்கி மூழ்கடித்தது. மீட்புப் பணியில் உதவிய இலங்கை கடற்படை அவசர அழைப்பு வந்ததன் அடிப்படையில் இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையினர் மூழ்கிக் கொண்டிருந்த போர்க்கப்பலில் 32 கடற்படை வீரர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்தக் கப்பலில் 180 வீரர்கள் இருந்த நிலையில் பலர் காணாமல் போயினர். தொடர் தேடுதலுக்கு பிறகு 87 நபர்களின் சடலங்கள் மீட்கப் பட்டதாக இலங்கை தெரிவித்துள் ளது. 61 பேரை இன்னும் காண வில்லை. இவர்களை உயிருடன் மீட்பதும் சாத்தியமில்லை என கூறப்படுகிறது. நீர்மூழ்கிக் கப்பல் மூலம் தாக்கி மூழ்கடிப்பு ஈரான் கப்பல் மூழ்கியதை முத லில் வெளியிட்ட தனியார் செய்தி  நிறுவனம் அந்த கப்பல் நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டி ருக்கலாம் என தெரிவித்தது. ஆனால் இலங்கை பாதுகாப்புத்துறை அந்தத் தகவலை உடனடியாக உறுதி செய்யவில்லை.

இதனிடையே, அமெரிக்க போர்க்கப்பலால் தான் ஈரான் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது என்பதை அமெரிக்க யுத்தத் துறை  செயலாளர் பீட் ஹெக்செத் தானா கவே அறிவித்தார். அதன்பிறகு தான், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல், இந்தியப் பெருங்கடல் பகுதியில் வைத்து ஈரான் கப்பலை தாக்கி யிருப்பது தெரியவந்தது. ‘அமைதியான மரணம்’ என கொக்கரித்த அமெரிக்கா  இரண்டாம் உலகப் போர் முடிந்த 80 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக, அமெரிக்க கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று எதிரி நாட்டின் போர்க்கப்பலை மூழ்கடிக்க ‘டார்பிடோ’ (Torpedo) ஏவுகணை யை ஏவித் தாக்கியுள்ளது.  இத்தாக்குதல் தொடர்பான வீடியோவையும் அமெரிக்காவின் ராணுவத்தலைமையகம் பென்டகன் வெளியிட்டுள்ளது. அக்கா ணொளியில் ஒற்றை டார்பிடோ ஏவு கணை கப்பலின் பின்பகுதிக்கு அடி யில் வெடித்து, அதன் அடிப்பகுதி யைத் தகர்த்துச் செல்வது தெரிகிறது.

இந்தத் தாக்குதலை, ‘அமைதி யான மரணம்’ என்றும், பீட் ஹெக்செத் ஆணவத்தோடு கொக்கரித்துள்ளார். இந்திய எல்லை வரை  விரிவடைந்த யுத்தம் ‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தி யின்படி, இரண்டாம் உலகப் போர் முடிவதற்கு சில நாட்களுக்கு முன்பு, 1945 ஆகஸ்ட் 14 அன்று அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்  கடைசியாக ‘யுஎஸ்எஸ் டார்ஸ்க்’ (USS Torsk) என்ற நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஜப்பான் கப்பலை மூழ்கடித்ததாக பதிவு செய்துள்ளது. அதன்பிறகு பனிப்போர் காலத்தி லும், ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, ஏமனில் ஆட்சியை கவிழ்க்க வும் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், அவை உளவுத் தகவல்களைச் சேக ரிக்கவும், ‘குரூஸ் ஏவுகணைகளை’ (Cruise missiles) ஏவவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. ஆனால், இந்தியாவின் அழைப்பின் பேரில் விருந்தினராக வந்து திரும்பிய போர்க்கப்பலை தற்போது அமெரிக்கா தாக்கி அழித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா - இஸ்ரேல் துவங்கிய போர் இந்திய கடல் எல்லை வரை வந்துள்ளது. மோடி அரசின் கோழைத்தனம் எனினும் இந்திய பிரதமர் மோடி, இதுபற்றி வாய் திறக்கவில்லை. தமது நாட்டின் விருந்தினராக வந்த கப்பலை, இந்திய பெருங்கடல் பகுதியிலேயே அமெரிக்கா தாக்கி அழித்திருக்கும் நிலையில், பிரதமர் மோடி இதனைக் கண்டித்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாதது வெட்கக்கேடானது என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. “மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த பதற்றமான சூழ்நிலை குறித்து, இந்திய அரசு ஒரு தெளிவான, உறுதியான நிலைப் பாட்டை எடுக்கத் தவறிவிட்டது. சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் பலவீனத்தையும், துணிச்சலின்மையையும் இது பிரதி பலிக்கிறது.

அமெரிக்காவின் இந்த செயல், இந்தி யாவுக்கும் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்து இருக்கிறது. ஆனால், இதுவரை இந்திய அரசு இதுகுறித்து எந்த  அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்காதது மேலும் அதிர்ச்சியை தருகிறது. ஈரா னில் குறிவைத்து நடத்தப்பட்ட படு கொலைகள் தொடர்பாக மோடி  அரசு அமைதி காப்பது வியப்பளிக்கா மல் இருக்கலாம். ஆனால், இந்திய அரசு இதுநாள் வரையிலும் இவ்வ ளவு பயத்துடனும் தயக்கத்துடனும் இருந்தது இல்லை” என்று பலரும் விமர்சித்துள்ளனர்.  பாஜக சமாளிப்பு ஆனால், “ஈரான் போர்க் கப்பல் மீதான தாக்குதல் சம்பவம் இந்திய கடல் எல்லையில் நிகழவில்லை. இலங்கை கடல் எல்லையிலும் நிகழ வில்லை.

இந்திய, இலங்கை கடல் எல்லைகளுக்கு அப்பால்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது” என்று, பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி சமாளித்துள்ளார். மேற்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ப்பதற்றம் தற்போது இந்திய கடல் எல்லை வரை விரிவடைந்திருப்பதாக சர்வதேச பாதுகாப்புத் துறை தொடர்பான ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசமான விளைவுகள் ஏற்படும் இதனிடையே, இந்தியப் பெருங்கடலில் ஈரானின் கடற்படைக் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி மூழ்கடித்த நிலையில், இதற்காக அமெரிக்கா “மோசமான விளைவுகளை” சந்திக்கும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் செய்யது அப்பாஸ் அரக்சி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி, தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் கடல் எல்லையில் இருந்து வெகு தொலைவில் அமெரிக்கா  இந்த ‘கடல்சார் கொடூரத்தை’  நிகழ்த்தியுள்ளது. இந்தியாவின் விருந்தினராக சென்றிருந்த ‘டெனா’ போர்க்கப்பல் சர்வதேச கடல்  பகுதியில் பயணித்துக் கொண்டி ருந்த போது எந்தவித முன்னெச்ச ரிக்கையும் இன்றி தாக்கப்பட்டுள் ளது. இதற்கு பதிலடியாக அமெரிக்கா “மோசமான விளைவுகளை” சந்திக்கும் என்று எச்சரித்துள்ளார்.