மருத்துவமனைகளில் நாம் பெரும்பாலும் பெண் செவிலியர்களைத்தான் பார்ப்போம். ஆண்கள் அந்தப் பணியைத் தேர்வு செய்வ தும் குறைவாகவே இருந்து வந்தது. சொல்லப் போனால், ஆண்கள் செவிலியர்களாக ஆக முடி யாது என்றுதான் பலரும் நினைத்து வந்தனர். அண்மைக்காலத்தில் செவிலியர் படிப்புக்கு ஆண்கள் விண்ணப்பிப்பது அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் அதன் அதிகரிப்பு 30 விழுக்காடாக இருக்கிறது. இரு பாலரும் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றி ருக்க வேண்டியது அவசியமாகும். பட்டப்படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்பு ஆகிய இரண்டும் உள்ளன. பொதுவான படிப்புதான் முன்பெல்லாம் இருந்தது. தற்போது குழந்தைகள் நல மருத்துவம், அணு அறி வியல், அவசரகால மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புப் பிரிவுகளும் உள்ளன. நல்ல வேலைவாய்ப்பை வழங்கக்கூடியதாக இருக்கும் இந்தப் படிப்பை தமிழ்நாட்டில் 5 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலலாம். சென்னை, மதுரை, செங்கல்பட்டு, தேனி மற்றும் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனைகளில் இந்தப் படிப்பு உள்ளது. மேலும் நிறைய தனியார் கல்லூரிகளும் உள்ளன. செவிலியர்களின் தேவை பெரும் அளவில் அதிகரித்திருப்பதால் இந்தப் படிப்புக்கான சேர்க்கைக்கான கிராக்கியும் கூடுத லாக உள்ளது.