tamilnadu

img

அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க வட்ட மாநாடு

அனைத்துத் துறை  ஓய்வூதியர் சங்க வட்ட மாநாடு

நாகப்பட்டினம், ஜூலை 21-  தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க நாகப்பட்டினம் வட்ட மாநாடு, வட்டக்கிளைத் தலைவர் எம்.எம்.காதர்மொய்தீன் தலைமையில் ஞாயிறன்று, நாகப்பட்டினம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.  வட்ட துணைத் தலைவர் வி.பூபதி வரவேற்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் ஆ.நடராஜன் துவக்கவுரையாற்றினார். வட்டச் செயலாளர் வி.மாரிமுத்து வேலை அறிக்கையையும், வட்டப் பொருளாளர் என்.பாபுராஜ் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.  வட்டத் தலைவராக கே. இராஜு, செயலாளராக வி.மாரிமுத்து, துணைத் தலைவர்களாக ஜி.காளிமுத்து, எஸ்.வாசு, சி.ராஜேந்திரன், இணைச் செயலாளர்களாக எஸ்.செல்வராஜ், எஸ்.மணியன், எம்.ஜெயராஜ், பொருளாளராக என்.பாபுராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டப் பொருளாளர் எம்.பி. குணசேகரன் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சு. சிவகுமார் நிறைவுரையாற்றினார்.  1984-க்கு பின்னர் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கமிடேசன் தொகையை ஓய்வூதியர்கள் தொடர்ந்து பெற உரிய அனுமதியை அரசு வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிந்து ஓய்வூதியம் பெறும் கிராம உதவியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதிய குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.150 பிடித்தம் செய்யப்பட வேண்டும். ஓய்வூதியர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.10,000 வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்ட இணைச் செயலாளர் எஸ். மணியன் நன்றியுரையாற்றினார்.