tamilnadu

நூலிழையில் உயிர்தப்பிய  ஏர் இந்தியா விமானம்

நூலிழையில் உயிர்தப்பிய  ஏர் இந்தியா விமானம்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டுச் சென்றது. 150க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த இந்த விமானத்தில்  தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானிகள் சாதுர்யமாக செயல்பட்டு “ரேம் ஏர் டர்பைன் (RAT)” பயன் படுத்தியே விமானம் பர்மிங்ஹாம் விமான நிலையத்திலேயே பத்திரமாக தரை யிறக்கினர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பர்மிங்ஹாமில் இருந்து தில்லி செல்லும் மற்றொரு ஏர் இந்தியா விமானமும் ரத்து செய்யப்பட்டது. இத னால் பயணிகள் கடும் அவதி அடைந்த னர். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு விமான நிறுவனம் வருத்தம் தெரிவித்துள் ளது. சமீபகாலமாக விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரேம் ஏர் டர்பைன் ரேம் ஏர் டர்பைன் (Ram Air Turbine - RAT) என்பது, விமானத்தின் முக்கிய என்ஜின்கள் செயல்படாமல் போகும் அவசர காலங்களில், விமானத்தின் முக்கிய அமைப்புகளுக்குத் தேவை யான மின்சாரத்தையும் ஹைட்ராலிக் அழுத்தத்தையும் வழங்கும் ஒரு சிறிய, தானாக இயங்கும் விசையாழி ஆகும்.