tamilnadu

img

சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு

சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு

சென்னை, அக். 15 - தமிழ்நாடு சட்டப்பேர வையின் மழைக்காலக் கூட்டத் தொடர் செவ்வாய்க் கிழமை (அக்.14) தொடங்கி யது. முதல்நாளில் சட்ட மன்ற உறுப்பினர் அமல் கந்த சாமியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஒத்திவைக்கப் பட்டது.  இதைத்தொடர்ந்து, புதன்கிழமை (அக்.15) காலை 9.30 மணிக்கு சட்டம ன்ற கூட்டம் தொடங்கியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கேள்வி நேரம் நடை பெற்றது.  அதன் பின்னர், தவெக தலைவர் விஜய்-யின் கரூர் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம்  தொடர்பாக பேசுவதற்கு, வழக்கமான அவை நடவடிக்கைகளை ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். முன்னதாக, இந்த விவகாரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அனுமதிக்கக் கோரி திமுக தோழமைக் கட்சி களும் பேரவைத் தலைவரி டம் அனுமதி கேட்டிருந்தன.  இந்நிலையில், கரூர் துயரச் சம்பவம் குறித்து முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் விரிவான விளக்கமளித் தார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனி சாமி அர்த்தமே இல்லாமல் போலித்தனமாக ஆவேசம் காட்டினார். ஆளும் கட்சி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். எதிர்க்கட்சி தலைவரின் பொறுப்பற்ற பேச்சால் ஒரு கட்டத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. எனினும் நிலைமையைப் புரிந்துகொண்ட முத லமைச்சர் நிதானத்தைக் கையாண்டார். எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் கள் மாறி மாறி பதிலடி கொடுத்தனர்.  இதனால் ஒரு கட்டத்தில், திக்குமுக்காடிய எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்களின் வாதங்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறி னார். அதிலிருந்து தப்பிப்ப தற்காக பேரவைத் தலைவர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா செய்தார். முத லமைச்சர், அவை முன்ன வர், பேரவைத் தலைவர்  ஆகியோரின் சாதுரியத்தால் எடப்பாடி பழனிசாமிக்கு அதுவும் கைகொடுக்க வில்லை. அவையிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள் என்று எச்சரிக்கை செய்யப் பட்டதை அடுத்து, கரூர் சம்பவத்தை முன்வைத்து, காட்டிய பம்மாத்துகள் எது வும் எடுபடாமல் அவையை விட்டு, அதிமுக எம்எல்ஏ-க்களுடன் வெளியேறினார்.