பாஜகவுடன் அதிமுக சேரவில்லை; பழனிசாமிதான் சேர்ந்துள்ளார் சேலத்தில் இரா.முத்தரசன் பேட்டி
சேலம், ஆக.5 - பாஜகவுடன் அதிமுக சேரவில்லை; எடப்பாடி பழனிசாமி தான் சேர்ந்துள்ளதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு, சேலத்தில் ஆக.15 - 18 வரை நடை பெறவுள்ளது. இந்நிலையில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் சேலத்தில் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய தாவது: தேர்தல் ஆணையம் முறையாக செயல்பட வேண்டும். அது, தற்போது பாஜகவின் அங்க மாக மாறிவிட்டது. பாஜகவிற்கு எதிரானவர்க ளின் வாக்குரிமையை நீக்கும் முயற்சி நடந்து வருகிறது. பீகாரில் நீக்கப்பட்டவர்களின் வாக்கு களை தமிழகத்தில் சேர்க்க தேர்தல் ஆணை யம் முயற்சித்து வருகிறது. தமிழ்நாட்டில் தொடர்ந்து சாதி ஆணவப் படுகொலைகள் நடைபெற்று வருவது கண்டனத்திற்குரியது. ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி களின் தலைவர்கள் இது சம்பந்தமாக ஒற்றை முடிவெடுத்து, ஆணவப் படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். இது தொடர்பாக முதல்வரை நேரில் சந்தித்து முறை யிட உள்ளோம் என்று தெரிவித்தார். திமுகவை எந்த விதத்தில் எதிர்க்கிறார் கள்? என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பரப்புரை யில் விளக்கமளிக்க வேண்டும். அதிமுக இன்னும் பாஜகவுடன் சேரவில்லை; எடப்பாடி பழனிசாமிதான் பாஜகவுடன் சேர்ந்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைத்தது எடப்பாடி பழனிசாமி செய்த மிகப்பெரிய அரசியல் பிழை. இதை மறைக்கத் தான் தேர்தல் அறி விப்புக்கு முன்னதாகவே எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரையை தொடங்கியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாடு சேலம் போஸ் மைதானத்தில் ஆக.15 ஆம் தேதி துவங்கவுள்ளது. ஆக.16 ஆம் தேதி நடைபெற உள்ள சிறப்பு மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கட்சிகளின் தலை வர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.