தோழர் நல்லகண்ணு உடல்நிலை: முதலமைச்சர் நேரில் விசாரிப்பு
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவ ரான ஆர்.நல்லகண்ணுவை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் நல்ல கண்ணு அவர்கள், ஆக.24ஆம் தேதி மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். ஆக.22ஆம் தேதி வீட்டில் தவறி விழுந்ததில் தலையில், கை விரலில் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்ட நிலையில், உடனடியாக தனியார் மருத்து வமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆக.24 அன்று மாலை உணவருந்தும்போது உணவுக்குழா யில் புரை ஏறியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, இரவு 10.30 மணிக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். தற்போது மருத்துவக் குழுவின் பரிந்துரைப்படி அவ ருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்த தகவல்களின்படி, “தலையி லும் கைவிரலில் ஏற்பட்ட சிறிய காயங்களால் எடுக்கப்பட்ட ஸ்கேனில் பாதிப்புகள் ஏதுமில்லை என மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அப்போலோ மருத்துவமனையில் இருந்து மருத்துவக் குழு வந்து ஆய்வு செய்து சென்று உள்ளது. நுரையீரல் பகுதியில் புரை ஏற்பட்டபோது உணவுத் துகள்கள் அப்பகுதியில் அடைத்துக் கொண்டதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. அதுவும் இப்போது சரி செய்யப்பட்டு, வெண்டிலேட்டரில் வைத்து சிறப்பு மருத்து வர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்” என்றார்.