tamilnadu

img

அமெரிக்கா வரி விதிப்பால் பாதிப்பு தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்படும் 500 டன் கடல் உணவுகள்

அமெரிக்கா வரி விதிப்பால் பாதிப்பு தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்படும் 500 டன் கடல் உணவுகள்

தூத்துக்குடி, ஆக.29 - அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப் பட்ட 500 டன் இறால், கணவாய் உள்ளிட்ட கடல் உணவுகளை வியாபாரி கள் வாங்க மறுத்ததையடுத்து, நடுக்கட லில் கப்பலில் சென்று கொண்டிருந்த 60  கண்டெய்னர்கள் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்படுகின்றன என்று உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தமிழக நிர்வாகி செல்வின் பிரபு தெரிவித்தார்.  கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தமிழக நிர்வாகி செல்வின்  பிரபு தூத்துக்குடியில் செய்தியாளர் களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரி வித்ததாவது:  அமெரிக்கா, இந்திய இறக்குமதி பொருளுக்கு 50 சதவீதம் வரி விதித் துள்ளது. இந்த வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதி பெரும் அளவு பாதிக்கப்படும். இந்தியாவில் இருந்து அதிகப்படியான கடல் உணவு அமெரிக்காவிற்கு ஏற்று மதியாகிறது. இதில் இறால் மீன் பெரிய பங்கு வகிக்கிறது.  பல மீனவர்களின் வாழ்வாதாரம், பல  பண்ணை இறால் தொழிலாளர்கள், பண்ணை இறால் விவசாயிகள் என அனைவரும் இதனால் பாதிக்கப்படுவர். இவ்வளவு பெரிய வரிவிதிப்பை அவர் களால் தாங்க முடியாத ஒரு சூழல் ஏற்படும். இறால் ஏற்றுமதியில் நாம் போட்டியை இழந்து விடுவோம். நமக்கு 50 சதவீதம் வரி என்று இருக்கும் பொழுது, நமது போட்டியாளர்கள் நாடான இந்தோனேசியா, ஈக்குவடார் மற்றும் இதர நாடுகளில் இருந்து இறக்கு மதி செய்யும் பொருட்களுக்கு 17, 18 சத வீதம்தான் வரி இருக்கிறது.  இந்திய இறாலின் விலை அமெரிக்க  சந்தையில் அதிகரிப்பதால், அமெரிக்கா வில் இந்திய இறால் வாங்கும் வியாபாரி கள் அனைவரும் ஆர்டர்களை கேன்சல் செய்கின்றனர். மேலும், “எந்த  கண்டெய்னர்களையும் இறக்குமதி செய்ய  வேண்டாம். இறக்குமதி செய்தாலும் நாங்கள் எடுக்க மாட்டோம். இல்லை யென்றால் இந்த 50 சதவீதம் வரியை ஏற்றுமதி செய்யும் நீங்களே கட்டுங்கள். நாங்கள் கட்ட மாட்டோம்” என்கின்றனர். இறால் மீன் தொழிலே நலிந்த லாபம் உடைய தொழில். இதற்கு 50 சதவீதம் வரி என்பது ஏற்றுமதியாளர்களால் முடி யாத காரியம். இந்த இறால் தொழிலை  நம்பி பல கிராம மக்கள் ஈடுபடுகின்றனர். பொருளாதார உதவி செய்திடுக! அமெரிக்காவுடனான வர்த்தகத்தை முழுமையாக நிறுத்தக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதால், பெருமளவு தொழிலா ளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும்.  அரசு இதில் தலையிட்டு நிவாரணம் கொடுத்தால், பல கிராம ஏழை மக்களின்  வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். கடல்  உணவு ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பாக ஒன்றிய அரசிடம் எங்களுடைய கோரிக்கைகளை கொடுத்துள்ளோம். அவர்கள் பரிசீலிப்பதாக எங்களுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளனர்.  அவர்களிடம் முக்கியமாக நாங்கள் வைத்த கோரிக்கை, “மானிய விலை யில் பொருளாதார உதவி செய்ய வேண்டும். குறைந்த வட்டியில் வங்கிக்  கடன் வழங்க வேண்டும். அமெரிக்கா வுடன் பேசி 50 சதவீதம் வரியை நீக்கி னால் உதவியாக இருக்கும்” என்று. ஏனென்றால் அமெரிக்கா உலகி லேயே பெரிய பொருளாதார நாடு. இந்த  பொருளாதாரத்தை சார்ந்து நாங்கள் 20  ஆண்டுகளாக பயணித்து உள்ளோம். உடனடியாக எங்களின் இறால் சந்தையை  வேறு நாடுகளுக்கு மாற்றுவதற்கு நீண்ட நாட்கள் ஆகும். ஏற்கனவே இறால் உணவை மற்ற நாட்டுச் சந்தை களுக்கும் அனுப்பிக் கொண்டுதான் இருக் கிறோம். மேலும் அந்த நாட்டிற்கே இறால் மீன்களை கொடுக்கும் போது விலை குறைத்து கேட்பார்கள். இந்த சூழ்நிலை வந்தால், மீனவர்களும் பண்ணை விவசாயிகளும் பாதிக்கப் படுவார்கள். ரூ.24 ஆயிரம் கோடி இழப்பு நாங்கள் மீனவர்களிடமோ, இறால்  பண்ணை விவசாயிகளிடமோ கூடுத லாக விலை கொடுத்து இறால் மீன் வாங்க முடியாது. இந்தியாவில் கடல் உணவு  கடந்த 20 வருடமாக நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது. 2010-இல் வெறும் ரூ.4,500 கோடியாக இருந்த கடல் உணவு ஏற்றுமதி, இன்று ரூ.64 ஆயிரம்  கோடியை எட்டியுள்ளது. இதில் அமெரிக் காவிற்கு மட்டும் ரூ.24 ஆயிரம் கோடி. இந்த வரிவிதிப்பால், அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் ரூ.24 ஆயிரம் கோடி பொருளை ஒரே இரவில் நிறுத்தம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.  இறால் பண்ணை விவசாயிகள் தற்போது இறால் உற்பத்தியை குறைத் துள்ளனர். அமெரிக்காவில்தான் பெரிய அளவுடைய இறால் வாங்குவார்கள். மற்ற நாடுகளில் சிறிய அளவிலான இறால்தான் வாங்குவார்கள். பெரிய  இறால் வளர்ப்புதான் விவசாயி களுக்கு, மீனவர்களுக்கு லாபத்தை கொடுக்கக் கூடியது. சிறிய அளவிலான  இறால்களை வளர்க்கும் போது அவர் களும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. சமீபத்தில் நாங்கள் அமெரிக்கா விற்கு ஏற்றுமதி செய்த கண்டெய்னர்கள் அமெரிக்காவிற்கு பாதி தூரம் சென்ற நிலையில், “அந்த கண்டெய்னர்களை அனுப்ப வேண்டாம். அதை திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்” என்று அமெரிக்க இறக்குமதியாளர்களிடம் இருந்து எங்களுக்கு மின்னஞ்சலில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. 500 டன் எடையிலான, 50 முதல் 60  சரக்கு பெட்டகங்கள் திரும்பி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 15 நிறுவனங்கள் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்து வருகின்றன. ஒவ் வொரு நிறுவனத்திலும் சுமார் ஆயிரம் முதல் 1,500 தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். இந்தியா முழுவதும் பல லட்சம் தொழிலாளர்கள் இதில் பணி யாற்றுகின்றனர். 50 முதல் 60 சதவீதம்  தொழிலாளர்களுக்கு நாங்கள் வேலையே  கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.