சலோ ஹைதராபாத் தியாகிகளுக்கு மரியாதை
ஆகஸ்ட் 28, 2000ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திராவின் தலைநகரான ஹைதராபாத்தில் மின்சார கட்டண உயர்வுக்கு எதிரான ‘சலோ ஹைதராபாத்’ போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராமகிருஷ்ணா, விஷ்ணுவர்த்தன் ரெட்டி, பாலசுவாமி ஆகிய 3 தோழர்கள் உயிரிழந்தனர். “சலோ ஹைதராபாத்” தோழர்களின் 25ஆவது நினைவு தினத்தை கடைப்பிடிக்கும் வகையில் ஹைதராபாத்தின் ஷாஹித் சௌக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (தெலுங்கானா மாநிலக்குழு) உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினர்.