states

img

பீகாரில் வாக்காளர் உரிமை யாத்திரையை சீர்குலைக்க பாஜக தீவிரம் ‘பயங்கரவாதிகள் எச்சரிக்கை’ மூலம் மிரட்டல் ; காங்கிரஸ் அலுவலகம் மீது தாக்குதல்

பீகாரில் வாக்காளர் உரிமை யாத்திரையை சீர்குலைக்க பாஜக தீவிரம் ‘பயங்கரவாதிகள் எச்சரிக்கை’ மூலம் மிரட்டல் ; காங்கிரஸ் அலுவலகம் மீது தாக்குதல்

பாட்னா  பீகார் மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தோல்வியை தவிர்ப்பதற்காக பாஜக,  தேர்தல் ஆணையம் மூலம் “சிறப்பு  தீவிர திருத்தம்” என்ற பெயரில்  முறைகேடாக 65 லட்சம் வாக்காளர் களை நீக்கியுள்ளது. மேலும் பல லட்சம் வாக்காளர்களை முறைகேடாக பீகார் வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளது. இதனை கண்டித்தும், நாடு முழு வதும் பாஜக - தேர்தல் ஆணைய கள்ளக் கூட்டணியின் வாக்குத் திருட்டை கண்டி த்தும் பீகாரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ராஷ்டிரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி உள்ளிட்டோர் “இந்தியா” கூட்டணி கட்சி யினர் முன்னிலையில் “வாக்காளர் உரிமை யாத்திரையை” மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு வாரமாக நடை பெற்றுக் கொண்டிருக்கும் இந்த வாக்கா ளர் உரிமை யாத்திரைக்கு மாநிலம் முழு வதும் நல்ல வரவேற்பும், ஆதரவும் பெருகி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட முதலமைச்சர்களும் வாக்காளர் உரிமை யாத்திரையில் கலந்து கொண்டனர். இந்த யாத்திரை பீகார் தலைநகர் பாட்னாவில் செப்., 1ஆம் தேதி பிரம்மாண்ட பொதுக் கூட்டத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில், வாக்காளர் உரிமை யாத்திரைக்கு பீகார் மக்கள் அமோக ஆதரவு அளித்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாஜக, பீகார் காவல்துறை மூலம் ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி மீது விதிமீறல் என்ற  பெயரில் வழக்குப் பதிவு செய்து மிரட்டல் விடுத்தது. இந்த மிரட்டலுக்கு அஞ்சாமல் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாத்திரையை உற்சாகத்துடன் தீவிரப்படுத்தினர். பயங்கரவாதிகள் எச்சரிக்கை மேலும், யாத்திரையை முடக்க  வியாழக்கிழமை அன்று பீகாரில்  பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி கள் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி யுள்ளனர் என அம்மாநிலத்தின் காவல்துறை அறிக்கை வெளியிட்டு கட்டுப்பாடுகளை விதித்தது.  தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அன்று வாக்காளர் உரிமை யாத்திரை யில் பிரதமர் மோடி குறித்து அவ தூறாக முழக்கமிட்டதாக குற்றம்சாட்டி, பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகை யிட்டு பாஜகவினர் போராட்டம் நடத்தி னர். தொடர்ந்து காங்கிரஸ் அலுவல கம் மீதும் பாஜக குண்டர்கள் தாக்கு தல் நடத்தினர். காவிக் கொடியை பந்தாடிய தேசியக் கொடி வாக்காளர் உரிமை யாத்திரையில் தேசியக் கொடி அதிகளவில் பயன் படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில், பாஜக குண்டர்களின் தாக்கு தலுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் பதி லடி கொடுக்க சம்பவ இடம் போர்க்கள மானது. குறிப்பாக தேசியக் கொடி கட்டிய கம்பங்களுடன் காங்கிரஸ் தொண்டர்கள், காவிக் கொடியுடன் தாக்குதல் நடத்திய பாஜகவினரை புரட்டியெடுத்தனர். காங்கிரஸ் தொண்டர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாஜகவினர் ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தால் பாட்னாவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் 3 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் புதிய நோட்டீஸ்

சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள பீகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் தேர்தல் ஆணையம் மூலம் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியுள்ளது. இது பாஜக - தேர்தல் ஆணைய கூட்டணியின் மாபெரும் முறைகேடு என “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், போதிய ஆவணங்கள் வழங்கவில்லை என்று 3 லட்சம் வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. அதில் நோட்டீஸ் பெற்ற வாக்காளர்கள் உரிய ஆவணங்களை 7 நாட்களில் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.  3 லட்சம் வாக்காளர்கள் புதிதாக மற்றும் படித்த இளைஞர்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.

வாக்குத் திருட்டு : நெட்டிசன்களிடம் சிக்கிக் கொண்ட அம்பானியின் வீடு

உலகின் மிக விலையுயர்ந்த வீடாக இருப்பது ஆன்டிலியா ஆகும். இது பிரதமர் மோடிக்கு நெருக்கமான தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமானது ஆகும். 27 தளங்களைக் கொண்டது. ரூ.15,000 கோடி மதிப்பு கொண்டது. மொத்தம் 12 பேர் இந்த குட்டி அரண்மனையில் வசிப்பதாக கூறப்படுகிறது. அதில் 600 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.  இந்நிலையில், வாக்குத் திருட்டில் அம்பானியின் வீடும் சிக்கியுள்ளது. பாஜக - தேர்தல் ஆணைய கூட்டணியின் வாக்குத் திருட்டு தொடர்பாக ஒவ்வொரு நாளும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. அதன்படி 2 நாட்களுக்குமுன் பீகார் மாநிலம் புத்த கயாவில் உள்ள வீடு (ஒரு அறை கொண்டது) எண் 6இல் 947 வாக்காளர்கள்  வசிக்கின்றனர் என வாக்காளர் பட்டியலில் கூறப்பட்டுள்ளது. இதனை ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது. உலகின் மிக விலையுயர்ந்த வீடான அம்பானியின் ஆன்டிலியாவிலேயே மொத்தம் 612 பேர் தான் வசிக்கின்றனர். ஆனால் ஒரே அறை கொண்ட வீட்டில் எப்படி 947 வாக்காளர்கள் வசிக்கின்றனர் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.