தில்லியில் கனமழை 176 விமானங்கள் ரத்து
வடமாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தேசிய தலைநகர் தில்லியும் வியாழக்கிழமை முதல் கனமழையை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக வெள்ளிக்கிழமை காலை தில்லி- என்சிஆர் பகுதியில் கனமழை பெய்ததால், பல்வேறு இடங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தில்லி விமான நிலையத்திலும் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. காலை 11:30 மணி வரை 146 புறப்பாடுகள் மற்றும் 30 வருகைகள் தாமதமாகின.