states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஆந்திராவிலும் போலி வாக்காளர்கள்?

தமிழ்நாட்டில் இருந்து போலி வாக்காளர்களை  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இறக்குமதி செய்துள்ளது என தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டி யுள்ளது. திருத்தணியை சேர்ந்தவருக்கு போலி வாக்காளர் அடையாள அட்டை உருவாக்கி, ஆந்திராவின் நகரி 6ஆவது வார்டுக்கான நகராட்சித் தேர்தலில் போட்டியிட வைத்து அவரை கவுன்சில ராக்கியதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்ச ருமான ரோஜா மீது தெலுங்கு தேசம் கட்சி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்ட த்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்பவ ருக்கு சாய் சந்தியா ராணி என்ற பெயரில் போலி வாக்காளர் அடையாள அட்டை உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அலோக் ஆராதே,  பாட்னா உயர்நீதிமன்ற தலை மை நீதிபதி விபுல் மனுபாய் பஞ்சோலி  ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக வெள்ளிக்கிழமை அன்று பதவியேற்றுக் கொண்டனர். இரண்டு புதிய நீதிபதி களுக்கு இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். புதிதாகப் பதவியேற்ற நீதிபதி களுடன், தற்போது உச்சநீதிமன்றம் 34 நீதிபதிகளைக் கொண்டுள்ளது.