tamilnadu

img

இந்தியன் வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரிகள் பணி

இந்தியன் வங்கியில் உள்ளூர் வங்கி அதிகாரிகள் பணி

தேர்ச்சி பெற்றவர்களுக்கு 8 மாதமாகியும் பணிநியமன ஆணைகள் வழங்காத நிலை!

ஒன்றிய நிதியமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கடிதம்

மதுரை, ஆக. 29 - உள்ளூர் வங்கி அதிகாரிகள் தேர்வில் வெற்றி  பெற்றவர்களுக்கு, இந்தியன் வங்கி நிர்வாகமானது, 8 மாதங்களாக பணி நிய மன ஆணை வழங்காமல் இருப்பது  குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் சு. வெங்கடேசன் எம்.பி. கேள்வி  எழுப்பியுள்ளார். இந்த பிரச்சனையில், உடனடியாக  தலையிட்டு பணிநியமன ஆணைகளை  வழங்க வேண்டும் என்று ஒன்றிய நிதியமைச்சர்,  இந்தியன் வங்கி மேலாண்மை இயக்குநர் மற்றும்  முதன்மை செயல் அதிகாரி ஆகியோருக்கு சு.  வெங்கடேசன் எம்.பி. கடிதங்களையும் எழுதியு உள்ளார். அந்தக் கடிதங்களில் அவர் கூறியிருப்ப தாவது: இந்தியன் வங்கி, உள்ளூர் வங்கி அதிகாரிகள்  முன்னூறு பேரை (Local Bank Officers) பணிய மர்த்துவதற்கான அறிக்கையினை 13-08-2024 அன்று வெளியிட்டது. தமிழகத்தில் எழுத்துத் தேர்வு எழுதுவதற்கான மையங்களைத் தேர்ந்தெ டுத்தவர்களுக்கு பெங்களூரு, ஹைதராபாத் மற்றும்  மைசூரு போன்ற மையங்கள் ஒதுக்கப்பட்டன. இது தொடர்பாக 6-10-2024 அன்று இந்தியன் வங்கி மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை செயல்  அதிகாரிக்குக் கடிதம் எழுதினேன்.  இதையடுத்து இணையவழியில் அக்டோபர் 10, 2024 அன்று நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு 1305 பேர் தெரிவு  செய்யப்பட்டனர். ஆனால், மாநில  வாரியாக, இடஒதுக்கீடு அடிப்படை யில் பட்டியலினத்தவர், பழங்குடியினர்  மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் வாரி யாகத் தெரிவு செய்யப்பட்டவர்களின் மதிப்பெண் கள் வெளியிடப்படவில்லை. கட்- ஆப் (Cut off)  மதிப்பெண்ணும் வெளியிடப்படவில்லை.  ஆனால் இந்திய வங்கி ஊழியர்கள் தேர்வு  (IBPS) மற்றும் ஒன்றிய பொதுத்தேர்வு ஆணையம்  (UPSC) போன்ற அமைப்புகள் தெரிவு செய்யப் பட்டவர்களின் மதிப்பெண்களை மாநில வாரியாக வும், இடஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாகவும் மதிப் பெண்களை வெளியிடுகின்றன.  இதுதொடர்பாக நான் எழுதிய கடிதத் திற்கு, இந்தியன் வங்கியின் முதன்மைப் பொது மேலாளர் எழுதிய பதிலில், இறுதிப் பட்டியலை  வெளியிடும் பொழுது, இந்தியன் வங்கி ஊழியர் கள் தேர்வு மற்றும் ஒன்றியப் பொதுத் தேர்வு  ஆணையம் ஆகியவை கடைபிடிக்கும் நடை முறையைப் பின்பற்றியே தெரிவு செய்யப்பட்ட வர்களின் மதிப்பெண்கள் மாநில வாரியாகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாகவும் வெளியிடு வதாகத் தெரிவித்தார்.  ஆனால், தேர்வு நடைபெற்று 8 மாதங்கள்  ஆன பிறகும்கூட, தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி  நியமன ஆணை வழங்கப்படவில்லை. இதற்குப் பிறகு தேர்வு நடவடிக்கைகளைத் துவக்கிய பல  வங்கிகள் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பணி நிய மன ஆணைகளை வழங்கி விட்டன. அவர்கள் பணியிலும் சேர்ந்து விட்டனர்.  எனவே, உள்ளூர் வங்கி அதிகாரிகள் தேர்வில்  வெற்றி பெற்றவர்களுக்கு இந்தியன் வங்கி  நிர்வாகம் விரைவில் பணி நியமன ஆணை  வழங்கிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இதுதொடர்பாக ஒன்றிய நிதியமைச்சருக்கும், இந்தியன் வங்கி மேலாண்மை இயக்குநர் மற்றும்  முதன்மை செயல் அதிகாரிக்கும் கடிதம் எழுதி யுள்ளேன். இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தி யுள்ளார்.